பக்கம்:எமிலி ஜோலா-1.pdf/88

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சி.பி. சிறறரசு 83 மனிதன் எதை விரும்பிலுைம், விரும்பாவிட்டாலும் இகளரவத்தை விரும்பியே திரிவான். அந்த முறையில் அவன் எவ்வளவோ கொடிய தண்டனைக்கு ஆளாயிருந் , த்ர்லும், இறுதியாக இருந்த கெளரவத்தையும் விட்டு, வைக்கவில்லை. ஆம், அவன் இன்று ஒன்றும் பேச முடியர்தவன். அவனுக்காக ஏதாவது பேசத் துணிந்து முன்வரவேண்டுமானுல் நீதி ஒன்றுதான். அந்த நீதியை நீசர்கள் காலடியிலே மிதித்துக் கொண்டிருக்கின்ருர்கள். பிரபுக்கள் பேசலாம், அவர்களுக்கு இதுவா வேலே ? . நியாய சிந்தை யுள்ளவர்கள் பேச முன்வரலாம். அவர் எழுதினுல்தானே விற்பனே அதிகம். அப்படியிருக்க எப்படி ஆதரித்து எழுதும்? பேச்சாளன் முன்னுக்கு வரலாம். நெஞ்சை நெரித்து விடுவார்களே எழுத் தாளன் முன்வரலாம். பேணுவைப் பிடிங்கி விடுவார்களே? பொதுமக்கள் வரலாம். அவர்கள் குடிசைகளுக்குத் இ வைத்துவிடுவார்களே சட்ட நிபுணன் முன்வரலாம். சன்னத்துப் போய்விடுமே? சர்க்கார் உத்தியோகஸ்தன் முன்வரலாம். சமாதானம் கூறவேண்டுமே சர்க்காருக்கு? அதுவல்லவா அன்றைய பிரான்சு நாட்டின் நிலமை. என்ருலும் அவ்வளவு பெரிய அகண்ட சாம்ராஜ்யத் தில் ஒருவனே துணிந்து முன்வந்தான். அவன்தான் ஏழையின் தோழன் எமிலி ஜோலா. தயை தாட்சண்ணி யம் எதையுமே பொருட்படுத்தாமல், கயவாளிகளின் கரடு முரடான மூளே நிலத்தில் எழுத்தேர் கட்டி உழுது, எங்கும் பரபரப்பை யுண்டாக்கி நீதி விதை விதைத்து. நீசர்களின் முகமூடியைக் கிழித்தெறிந்தவன் நிகரற்ற் பேளுவீரன் ஜோலா. பல்லிளிப்பு, பரிகாசம் இவைகளைப் பக்கத்திலேயே சேர்க்காமல் முகத்தில் இரத்த வடுக்கள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எமிலி_ஜோலா-1.pdf/88&oldid=759891" இலிருந்து மீள்விக்கப்பட்டது