பக்கம்:எமிலி ஜோலா-1.pdf/90

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சி.பி. சிற்றிர்க் - 91 தீவு நோக்கி கைதியை ஏற்றிக்கொண்டுக்ப்பல் புறப்பட்டு விட்டது. சிறிய சிறிய கட்டிடங்களெல்லாம் மறைந்து, பிறகு மணிக்கூண்டுகள் மறைந்து, அதன் பிறகு பெரிய பெரிய கட்டிடங்களெல்லாம் மறைந்து, டாவில்லி என்ற துறைமுகப்பட்டினமே மறைந்து, 10, 15 மைல்களுக் கப்பால் சென்றுவிட்டது கப்பல். சேயைச் சுடுகாட்டில் தகனம் செய்தவர்கள்போல் திரும்பினுர்கள் சி ல ர், எதிரியை வென்று வெற்றிக்கோடி நாட்டித் திரும்பும் வீரர்கள்போல் எக்காளமிட்டுத் திரும்பினர் பலர். கருநிறக்கடல். மேலே கார்மேகம். கண்கண்ட துரமெல்லாம் கடல், மீன்கள் சுதந்திரமாகத் துள்ளி விளையாடுகின்றன. இந்தத் துர்ப்பாக்கியன் கைகளிலே விலங்கு. தாயகம் மறைந்துவிட்டது. இனி இந்தத் தரணியே மறைந்துவிடலாம். ஆனால் ' நான் மறைவ தென்னுளோ ? போர்க்கப்பலேறிப் பல வேற்று நாடு களுக்குச் சென்று படையெடுத்திருக்கின்றேன். இன்று பொல்லாங்கு சுமத்தப்பட்டு இந்தப் பொல்லாத கப்ப வில் பூதத் தீவுக்குச் செல்கின்றேன். 'வ்வளவு வேகமாக முன்னேறினேனே அவ்வளவு வேகமாகக் கீழே விழுந்து விட்டேன். சாதாரணத் தரையிலா விழுந்தேன் ? சகிக்க முடியாத அவமான சாகரத்தில் விழுந்துவிட்டேன். பிரெஞ்சுத் தாயகமே! உனக்கு நான் இனி ஒன்றும் செய்ய முடியாதவனுய்விட்டேன், நீ வாழி என்று சொல்வது 'தவிர. அநீதியால் பழி சுமத்தப்பட்டு என்ன மட்டிலும் திவுக்கு அனுப்புவதாகச் சிலர் எண்ணுகிருர்கள். இல்லை, இல்லை, என் அருமை நாட்டின் நீதியை வழியனுப்பு கிருர்கள். உனது பந்தபாசங்கள் என் மனம் விட்டகல வில்லை. இவ்வளவு விசுவாசத்தோடு இருந்த உன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எமிலி_ஜோலா-1.pdf/90&oldid=759894" இலிருந்து மீள்விக்கப்பட்டது