பக்கம்:எமிலி ஜோலா-2.pdf/14

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இ. பி. சிற்றரசு - 13 தலைமையில் நிர்மாணிக்கப்பட்டது. இந்த இயக்கத்தைப் பரப்புவதற்கு லா ப்ளாரா பரோல் (La Plata Parole) என்ற ஒரு பத்திரிகையை ஆரம்பித்தார்கள். இது ஒன்று தான் யூத எதிர்ப்பு உணர்ச்சியை நாடு முழுதிலும் கொண்டுபோய்விட்டு நல்லவர்கள் மனத்தை எல்லாம் கெடுத்துவிட்டது. -- இந்தப் பத்திரிகையின் பொருமையில் பலர் சிக்கித் தம் சிந்தையைப் பறிகொடுத்ததற்குக் காரணம் என்ன வென்ருல், இதன் சதுரங்கத்தில் அகப்பட்ட விஷயங் கள் இரண்டு. ஒன்று :- இந்த இயக்கம் ஆரம்பிக்கும்

  • .

போது பிரெஞ்சு இராணுவப் படையில் மிகப் பொறுப்பு -வாய்ந்த இராணுவ அதிகாரிகள் 500 பேர்கள் யூதர் களாகவே இருந்தார்கள். இரண்டாவது பணுமா. கால்வாயை வெட்டுவதற்காக ஏற்படுத்தப்பட்டிருந்த பனுமா கம்பெனியில் நடந்த மோசடி ஒன்று. அந்த மோசடிக்குக் காரணம் மூன்று பொறுப்பு வாய்ந்த உத்தி யோகஸ்தர்களான யூதர்கள்தாம் என்று முடிவுகட்டப் பட்டிருந்தது. ஆக இந்த இரண்டு காரணங்களும் இந்த யூத எதிர்ப்பு இயக்கத்தை மின்னல்வேகத்தில் கொண்டுபோய் விட்டுவிட்டன. அதுவும் டிரைபஸைக் கைதுசெய்யப்பட்டபோது இந்தப் போராட்டம் உச்சநிலையை அடைந்துவிட்டது. ஒரு பெரிய இராணுவத் தலைவனேயும், 500 இராணுவ உயர்தர உத்தியோகஸ்தர்களேயும் பகைத்துக் கொள்ளு மளவுக்கு விரோதம் வளர்ந்துவிட்ட கார்ணத்தால் விபரீதம் என்ன விளந்து விடுமோ என்று நாடு மிக மிகப் பயந்துவிட்டது. பிரெஞ்சுநாடு மாத்திரமல்ல. அகில ஐரோப்பாவையுமே இந்த பயங்கரம் சூழ்ந்து கொண்டது. சாவா, வாழ்வா என்ற பெரும்போராட்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எமிலி_ஜோலா-2.pdf/14&oldid=759901" இலிருந்து மீள்விக்கப்பட்டது