பக்கம்:எமிலி ஜோலா-2.pdf/39

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 766 Ggr೧ು!T இப்படி நீதியும் அநீதியும் உராய்ந்து உராய்ந்து ஏற்படும் நெருப்பு ஜ்வாலேயில் என் உடல் தகிக்கப்பட் டாலும், அதன் பிறகாவது என் சிதைவிலிருந்து நீதி வெளியாகட்டும் என்ற மரண முடிவிலேயே குற்றஞ் சாட்டுகிறேன். - - - 'இந்த வழக்கில் இவ்வளவு பொறுப்பில்லாமல் நடந்து கொண்ட டார்ட் என்பவர் மீது நான் குற்றம் சுமத்துகிறேன். கிடைத்தஉண்மைக் குறிப்புகளே மறைத் ததற்காக யுத்த மந்திரியின் மீது நான் குற்றம் சுமத்து கிறேன். அதே பழித் தொழிலைச் செய்த இராணுவக் குழுவினரையும், உதவிப் படைத் தலைவரையும் நான். அஞ்சாமல் குற்றம் சாட்டுகிறேன். கைதியினிடத்தில் கொடுமை காட்டிய பாரீஸ் சிறைச்சாலே தலைவர் மீது நான் குற்றம்சாட்டுகிறேன். வழக்கில் பொய் சாட்சி களேயும், பொய்க் கையெழுத்துக்களையும் தயார் செய்த வர்கள் மீது நான் குற்றம் சாட்டுகிறேன். பொதுமக்கள் மனத்தை மாற்றும் வகையில் பொய்ப் பிரசாரம் செய்த யுத்த இலாகா முழுவதையுமே நான் குற்றம்சாட்டு கிறேன். வழக்குக்கு ஆதாரமான சாட்சியங்களைத் தண் டிக்கப்படுபவளுல் பரிசீலனையும் சமாதானமும் கூறமுடி யாத வகையில் அவசரத்துடன் நீதி வழங்கிய முதல் இராணுவ மன்றத்தின்மீது நான் குற்றம்சாட்டுகிறேன். உண்மையான குற்றவாளியை, குற்றமற்றவனென. விடுதலையளித்துப் பெருந் தவறு செய்துவிட்ட இரண் டாவது இராணுவ விசாரண மன்றத்தின் மீது நான் குற்றம்சாட்டுகிறேன். ஒரு அண்ைதயின் மீது இல்லாத பழிகளைச் சுமத்தி ஆயுட்காலத் தண்டனையளித்த அனே வர்மீதும் குற்றம் சுமத்துகிறேன். - - இத்தகைய குற்றச்சாட்டுக்ளேத் தெரிவிப்பதின் மூலம் நான் சட்டத்தை அவமதிப்பதாக எண்ணி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எமிலி_ஜோலா-2.pdf/39&oldid=759927" இலிருந்து மீள்விக்கப்பட்டது