பக்கம்:எம். கே. டி. பாகவதர் கதை.pdf/101

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

98 தமிழ் கூறும் நல்லுலகம் விரும்பவில்லை; 'எங்கள் ஊருக்கு வாருங்கள், எங்கள் ஊருக்கு வாருங்கள்' என்று அவருக்கு அழைப்புக்கு மேல் அழைப்பாக விட்டுக்கொண்டே இருந்தது. எதற்கு நாடகம் நடத்தவும், கச்சேரி செய்யவும் தான்! மக்களிடம் செலுத்தும் அன்பே மகேசனிடம் செலுத்தும் அன்பு அல்லவா? பாகவதராலும் அந்த அழைப்புகளை நீண்ட நாட்கள் தட்டிக் கழித்துக் கொண்டிருக்க முடியவில்லை. 'அப்பா இருந்தால்கூட அதை விரும்பமாட்டார்' என்று நினைத்த அவர், அந்த அழைப்புக்களில் சிலவற்றை உடனே ஏற்றுக்கொண்டார். நாகர்கோயிலில் ஒரு நாடகம். கோடைகால மானதால் வெப்பம் இரவுவரைகூடத் தணியாமலிருந்தது. ஒப்பனை அறையிலிருந்த சக நடிகர்கள் அனைவரும் ஆளுக்கொரு குளிர்பானத்தை அருந்திக்கொண்டிருந்தனர். பாகவதருக்கு எதிர்த்தாற்போல் வைக்கப்பட்ட குளிர் பானம் மட்டும் அப்படியே இருந்தது. அதைப் பார்த்த திருமதி எஸ். டி.சுப்புலட்சுமி, 'என்ன பாகவதர் ஸ்ார், 'கூல்டிரிங்க் சாப்பிடவில்லையா?' என்றார். பாகவதர் பதிலுக்கு ஒன்றும் சொல்லவில்லை. அவருடைய முகத்தை ஏறிட்டுப் பார்த்துவிட்டுப் பேசாமல் இருந்துவிட்டார். எஸ். டி. எஸ். ஸும் அதற்குமேல் அவரைத் தொந்தரவு செய்ய விரும்பாமல் அப்பால் போய்விட்டார். அவருடைய தலை மறைந்ததும், 'ஏன், அன்றொரு நாள் நிகழ்ந்த அந்தச் சம்பவத்தை நினைத்துக்கொண்டு விட்டீர்களா?' என்றார் பாகவதருக்கு அருகிலிருந்த நண்பர் ஒருவர். அவ்வளவுதான்; பாகவதரின் கண்கள் கலங்க ஆரம்பித்துவிட்டன; 'குபுக்கென்று அவர் அழுதேவிட்டார்