பக்கம்:எம். கே. டி. பாகவதர் கதை.pdf/105

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

102 இது உண்மை; முற்றிலும் உண்மை. தந்தைக்கும் தனயனுக்கு மிடையே எத்தனையோ தகராறுகள் இருந் திருக்கலாம். ஆயினும் பாகவதர் அவரிடம் வைத்திருந்த மதிப்பு அவற்றால் என்றுமே குறைந்ததில்லை. நாகர்கோயில் நாடகத்துக்குப் பிறகு ஜலகண்ட புரத்தில் ஒரு நாடகம். அங்கேயும் பவளக்கொடி தான்; அதே ஜோடிதான். இரவு பத்து மணிக்கு நாடகம் ஆரம்பமாகவிருந்தது. கூட்டமோ சொல்லிமுடியாத கூட்டம். அந்தச் சமயம் பார்த்துத்தானா கோடைமழை கொட்டு, கொட்டு என்று கொட்டவேண்டும்? நாடகம் நடக்கவிருந்த கொட்டகையோ கீற்றுக் கொட்டகை. அந்தக் கொட்டகைக்கு வெளியே மட்டும் அல்ல; உள்ளேயும் தண்ணிர் புகுந்துவிட்டது. வெள்ளம்; ஒரே வெள்ளம்1 இந்த மழையைப்பற்றிக் கூடியிருந்த மக்கள் கொஞ்சமாவது கவலைப்பட்டார்களா என்றால் அதுதான் இல்லை; சந்தோஷப் பட்டார்கள். ஏன் அந்த ஊரில் ரொம்ப நாட்களாக மழையே இல்லையாம்; பாகவதர் வந்தவேளை மழை கொட்டு, கொட்டு என்று கொட்டுகிறதாம்! ஆனால் பாகவதர் அவர்களைப் போல் சந்தோஷப் படவில்லை; 'இந்த மழையில் நாடகத்தை நடத்தி உங்களை யெல்லாம் தொல்லைக்குள்ளாக்க நான் விரும்பவில்லை. இதே நாடகத்தை நாளை இரவு இதே தியேட்டரில் நடத்துகிறேன்; போய்வாருங்கள்' என்றார் கைகூப்பி. மக்கள் கேட்கவில்லை; எத்தனையோ நாட்கள் காத்திருந்து, எத்தனையோ தூரத்திலிருந்து நாங்கள் உங்களுடைய நாடகத்தைப் பார்க்க வந்திருக்கிறோம். மழையாவது, கிழையாவது! நீங்கள் நனைந்துகொண்டே நாடகம் நடத்தினால் நாங்களும் அதை நனைந்து கொண்டே பார்க்கத் தயார்' என்று சொல்லிவிட்டார்கள்.