பக்கம்:எம். கே. டி. பாகவதர் கதை.pdf/106

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

103 அப்புறம் என்ன, நடிகர்கள் ஆளுக்கொரு குடையைப் பிடித்துக்கொண்டு நாடகம் நடத்தினார்கள்; மக்களும் ஆளுக்கொரு குடையைப் பிடித்துக்கொண்டு பரம சந்தோஷமாக அதைப் பார்த்து ரசித்தார்கள்! இப்படிப்பட்ட மக்கள் பாகவதரைத் தம் தந்தைக் காகக் கூட ஒரு மாத காலத்துக்கு மேல் துக்கம் அனுஷ்டிக்க விடாமல் போனதில் வியப்பென்ன? பூமியில் மானிடராய்ப் பிறந்திருந்துமோர். ஒரு துறையில் பெயரும் புகழும் பெற்று விளங்கும் ஒருவன், அதே துறையைச் சேர்ந்த இன்னொருவன் தன்னை மிஞ்சப்பார்க்கும்போது அவனைத் தன்னால் முடிந்தவரை மட்டந்தட்டி வைக்க முயல்வது இயற்கை. இந்த இயற்கைக்கும் விரோதமாயிருந்தார் பாகவதர். தம்முடைய வழியைப் பின்பற்றி யாராவது பாடினாலோ, நடித்தாலோ அவர் பரம சந்தோஷப்படுவார். இது பிடிக்காத சிலர் 'உங்களுக்கு நீங்களே குழி தோண்டிக் கொள்கிறீர்கள்!" என்று அவரை எசரிப்பார்கள். பாகவதரோ அதை மறுத்து 'இல்லை, எனக்குநானே பெருமை தேடிக்கொள்கிறேன்!" GTSðTl_J fTfT. 'எங்களுக்கு அப்படித் தோன்றவில்லை; நீங்கள் தேடிக் கொண்ட பெருமையை இன்னொருவருக்காக இழப்பதாகவே தோறுகிறது?" என்பார்கள் அவர்கள். 'கிடையவே கிடையாது; என்னுடைய வழியைப் பின்பற்றி ஒருவன் படுகிறான் என்றால், என்னுடைய வழியைப் பின்பற்றி ஒவன் நடிக்கிறான் என்றால், அது எனக்குத்தான் பெரு ைதருவதாக இருக்குமே தவிர, அவனுக்கு ஒருநாளும் பெருமை தருவதாக இருக்காது!” என்பார் பாகவதர். ஆம், ஒவ்வொருவருக்கும் ஒரு தனி வழி இருக்க வேண்டும் என்பது அவருடைய அபிப்பிராயம்.