பக்கம்:எம். கே. டி. பாகவதர் கதை.pdf/109

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

106 பதிலாக நீங்கள் நாரதராக நடிப்பதில் எனக்குப் பரம திருப்தியே. நீங்கள் என்ன சொல்கிறீர்கள்? அதை முதலில் சொல்லுங்கள்!" 'உங்களுக்கு இதில் சம்மதம் என்றால் எனக்கும் சம்மதமே!’ என்றேன் நான். 'இதுதான் என்னை வியப்புக்குள்ளாக்குகிறது ஏனெனில், தற்போது நாடக உலகில் கிட்டப்பாவின் அளவுக்கு உயர்ந்து நிற்பவர் நீங்கள். அத்தகையவர் அவர் கதாநாயகனாக நடிக்கும் ஒரு நாடகத்தில் நாரதராக நடிக்க ஒப்புக்கொண்டது நாங்கள் செய்த பாக்கியம். இந்தாருங்கள், இதில் நாரதருக்கான பத்துப் பாடல்களும், அவற்றுக்கான வசனங்களும் இருக்கின்றன, பார்த்துக் கொள்ளுங்கள்: என்ற அவர் என்னிடம் ஒரு நோட்டை எடுத்து நீட்டிவிட்டு 'நீங்கள் விரும்பினால் இதிலுள்ள பாடல்களை நான் பாடிக் காட்டுகிறேன்; வசனங்களையும் பேசிக் காட்டுகிறேன்!" என்றார். அப்படியே செய்யுங்கள்; அதுதான் நல்லது' என்றேன் நான். அதற்கு மேல் நாலைந்து நாட்கள் அவர் தொடர்ந்து வந்து எனக்குப் பயிற்சி கொடுக்க, நான் அந்தப் பாடல்களையும் வசனங்களையும் மனப்பாடம் செய்து கொண்டு விட்டேன். இதில் எஸ்.ஆர்.பாகவதருக்குப் பரிபூரண திருப்தி; ஒருவிதத்தில் பெருமையுங்கூட. ஏனெனில், என்னுடைய குருநாதர்களில் அவரும் ஒருவராகிவிட்டார் அல்லவா? நாடகம் நடைபெறவேண்டிய நாள் வந்தது. நான் அதற்குச் செல்வதற்காகத் தயாராகிக் கொண்டிருந்தேன். அப்போது நாடகக் காண்ட்ராக்டர்களில் ஒருவர் ஓடோடி வந்து 'பாகவதர் லார், மன்னிக்கவேண்டும் என்றார் தட்டுத்தடுமாறி நின்று. 'ஏன்? என்றேன் நான்.