பக்கம்:எம். கே. டி. பாகவதர் கதை.pdf/111

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

108 நடிக்க விரும்பாததால் என் பெயரோ, புகழோ மங்கிவிட வில்லை; மாறாக வளர்ந்தது. இந்த நிலையில் ஒரு நாள் எஸ்.ஆர். பாகவதர் என்னைப் பார்க்கவந்தார். அன்று ஏன் கிட்டப்பா உங்களுடன் நடிக்க விரும்பவில்லை, தெரியுமா? இன்று இத்தனை பேரோடு புகழோடு விளங்கவிருக்கும் உங்களுடன் அன்று தான் ஏன் நடிக்க வேண்டும் என்று அவர் நினைத்தது தான் காரணம்' என்றார். அதனால் என் உச்சி குளிர்ந்து விடவில்லை யாயினும், 'திரு எஸ்.ஜி. கிட்டப்பாவிடமும் அந்தப் பலவீனம் இருக்கிறது என்பதை உங்களுக்கு உணர்த்துவதற் காகவே நான் இந்தக் கதையைச் சொன்னேன் என்று தம் கதையைச் சொல்லிமுடித்தார் பாகவதர். 'அப்படியா? அது தெரியாதே எனக்கு?' என்று நண்பர் வாயைப் பிளந்தார்! ஆதியே, பரஞ்சோதியே! "ரோமாபுரி தீப்பற்றி எரியும்போது நீரோ மன்னன் பிடில் வாசித்துக் கொண்டிருந்தான்!” என்று சொல்கிறார்க ளல்லவா? அந் மன்னனைக் கூட ஒரு சமயம் சேலம் வாசிகள் தூக்கியடித்து விட்டார்கள். காரணம் வேறொன்றும் அல்ல, பாகவதரின் பாட்டுக் கச்சேரிதான்! அந்த ஆண்டு சேலம் நகரசபையார் நடத்திக் கொண்டிருந்த பொருட்காட்சியில் பாகவதர் பாட வந்திருந்தார். அப்போது அந்த நகரசபையின் தலைவரா யிருந்தவர் திரு பி.ரத்தினசாமிப்பிள்ளை என்பவராவார். அவர் பாகவதரின் இசையரங்குக்காக மிகப் பெரிய அளவில் கொட்டகை போட ஏற்பாடு செய்திருந்தார். அப்படி யிருந்தும் அன்று வந்திருந்த கூட்டம் அந்தக் கொட்டகைக் குள் அடங்குவதாயில்லை. மேற்கொண்டு வசதி செய்து கொடுப்பதற்கும் வழியில்லாததால் டிக்கெட் கொடுப்பது நிறுத்தப்பட்டது.