பக்கம்:எம். கே. டி. பாகவதர் கதை.pdf/112

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

109 அவ்வளவுதான்; பாகவதரின் கச்சேரியைக் கேட்க வேண்டுமென்பதில் தங்களுக்கிருந்த ஆர்வத்தில் மக்கள் பொருட்காட்சியைச் சுற்றிலும் கட்டியிருந்த தட்டிகளை யெல்லாம் பிய்த்து எறிந்து விட்டு உள்ளே நுழைய ஆரம்பித்துவிட்டனர். பாதுகாப்புக்காகப் போடப்பட்டிருந்த போலீஸாரோ அவர்களி டமிருந்து தங்களை பாதுகாத்துக் கொள்வதற்கே படாதபாடு படவேண்டியிருந்தது. இந்த நிலை பொருட்காட்சியின் உள்ளே மட்டும் இல்லை; வெளியேயும் இருந்தது. அதைச் சுற்றிலும் இருந்த மரங்கள், மின்சாரக் கம்பங்கள் அனைத்தும் அப்போது மாங்காயோ தேங்காயோ காய்த்துக் தொங்கும் மரங்களாக விளங்கவில்லை; மனிதர்களே காய்த்துத் தொங்கும் மரங்களாக விளங்கின. எங்கு நோக்கினும் தலைகள், தலைகள்,தலைகள்... மற்றவர்களுடைய கச்சேரிகளில் ஆண்களின் தலைகள் தான் அதிகமாயிருக்கும்; பாகவதருடைய கச்சேரிகளிலோ பெண்களின் தலைகள்தான் அதிகமா யிருக்கும். அன்றும் அதற்குக் குறைவில்லை. கட்டுக்கடங்காத கூட்டத்தைக் கட்டுப்படுத்த அப்போது ஒரே வழிதான் இருந்தது. அதாவது, பாகவதர் உடனே பாட ஆரம்பிக்கவேண்டும். அதைத் தவிர வேறு வழியேயில்லை என்று ஆகிவிட்டது. இதை உணர்ந்த பொருட்காட்சியின் நிர்வாகிகள் குறிப்பிட்ட நேரத்துக்குக் கொஞ்சம் முந்தியே பாகவதரைப் பாடுமாறு வேண்டினர். அவரும் சந்தர்ப்பத்தை உணர்ந்து தம் பக்க வாத்திய க்காரர்களை ஒரு நோக்கு நோக்கினார். அன்றையக் கச்சேரிக்குப் பாகவதரின் நெருங்கிய சகாவான சேலம் நாகரத்தினம் தம்பூராவை மீட்ட, மருங்காபுரி சமஸ்தான வித்வான் கோபாலகிருஷ்ணய்யர் பிடிலும், அருப்புக்கோட்டை தட்சணாமூர்த்தி ஆச்சாரி கஞ்சிராவும்