பக்கம்:எம். கே. டி. பாகவதர் கதை.pdf/113

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

410 வாசித்தார்கள். மாயூரம் திரு வேதநாயகம் பிள்ளை அவர்களின் பாடலான ஆதியே, பரஞ்சோதியே! என்ற பாடலைத் தேவமனோகரி ராகத்தில் பாகவதர் பாட ஆரம்பித்ததுமே கூட்டம் கட்டுக்கு அடங்கிவிட்டது. கச்சேரியும் களை கட்டிவிட்டது. முதல் பாட்டு முடிந்ததும், 'ஒரு நிமிஷம்'என்று தன் காமிராவைத் தூக்கிப்பிடித்துக் கொண்டே பாகவதரை நோக்கி வந்தார் பத்திரிகை நிருபர் ஒருவர். 'எனக்கும் ஒரு காப்பி' என்றார் பாகவதர். நிருபர், 'அவசியம் தருகிறேன்' என்றார். 'உங்களைக் கேட்கவில்லை; இவரைக் கேட்கிறேன்" என்று தமக்குப் பக்கத்தில் உட்கார்ந்து கூஜாவிலிருந்து காப்பியை டம்ளரில் ஊற்றிக் குடித்துக் கொண்டிருந்த மிருதங்க வித்வானைக் காட்டினார் பாகவதர். கூட்டத்தில் ஒரே சிரிப்பு இந்தச் சமயத்தில், "ஐயோ செத்தேன்' என்று ஒரு கூக்குரல்; பாகவதர் திடுக்கிட்டு எழுந்து பார்த்தார். கம்பத்தில் தொற்றிக் கொண்டிருந்த ஒருவன் மின்சாரத்தால் தாக்குண்டு கீழே விழுந்து செத்தான். அவனைப் போலவே தொற்றிக் கொண்டிருந்த இன்னொருவனுக்கும் அதே கதி: மற்றொருவனும் அதே மாதிரி தாக்குண்டு கீழே விழுந்து துடித்தபோது அவனைக் கொண்டு போய் ஆஸ்பத்திரியில் சேர்த்துவிட்டு வந்தார்கள். இந்தக் களேபரத்தில் பாகவதரால் மேலே பாடவா முடியும் அவர் மக்கள் இருந்த திசையை நோக்கிக் கைகூப்பி, 'என்மனம் சரியில்லை; இந்த நிலையில் என்னை மேலே பாடச் சொல்லி வற்புறுத்தாதீர்கள். தயவு செய்து கலைந்து செல்லுங்கள்' என்றார்.