பக்கம்:எம். கே. டி. பாகவதர் கதை.pdf/116

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

113 ஆனால் இத்தனை குறைகளையும் பாகவதரும் பக்கவாத்தியக்காரர்களும்தான் உணர்ந்தார்களே தவிர மக்கள் உணரவில்லை. அப்படி ஒரு மயக்கம் அவர்களுக்கு! ஒரு வழியாகக் கச்சேரி முடிந்தது. அன்றிரவு பிரமுகர் ஒருவர் வீட்டில் பாகவதர்தங்கியிருந்தபோது, 'இப்போது உங்களுக்கு ஒர் அருமையான சந்தர்ப்பம் வாய்த்திருக்கிறது!" என்றார் அவருடைய அந்தரங்க நண்பர் ஒருவர். ‘'எதற்கு?'என்றார் பாகவதர். 'மேலும் கொஞ்சம் விளம்பரம் தேடிக்கொள்ளத் தான். ' 'எப்படி?’’ 'மின்சாரத்தால் தாக்குண்டு செத்தார்களே இருவர், அவர்கள் இருவருடைய குடும்பத்துக்கும் தலைக்கு ஆயிரம் ரூபாய் கொடுப்பதாகச் சொல்லுங்கள். அதை நீங்கள் கொடுப்பதற்கு முன்னாலேயே அது பற்றி எல்லாப் பத்திரிகைகளிலும் கொட்டை எழுத்துக்களில் வருவதற்கு வேண்டிய ஏற்பாட்டை நான் உடனே செய்துவிடுகிறேன்!” என்றார் அவர். பாகவதர் சிரித்தார்! 'ஏன் சிரிக்கிறீர்கள்!' என்றார் அவர். 'எரியும் வீட்டில் சுருட்டுப் பற்றவைக்க வேறுஎவனையாவது தேடுங்கள்!' என்றார் பாகவதர் வெறுப்புடன். நண்பருக்கு என்னவோ போல் ஆகிவிட்டது. அதற்கு மேல் ஒன்றும் சொல்லாமல் போய்விட்டார். ஆனால் நடந்தது என்ன என்கிறீர்கள்? நண்பர் சொன்னது போல் பாகவதர் அவர்கள் இருவருடைய குடும்பங்களுக்கும் தலைக்கு ஆயிரம் ரூபாய் கொடுக்கத்தான் செய்தார். எம்.கே.டி.8