பக்கம்:எம். கே. டி. பாகவதர் கதை.pdf/12

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இனி அவரோ, அவரைச் சேர்ந்தவர்களோ அவருடைய ஜாதகத்தைப் பார்த்து ஒன்றும் ஆகப்போவ தில்லை யாகையால் நாமும் பார்க்க வேண்டாமே பாகவதரின் பள்ளிப்படிப்பைப் பற்றி அதிகமாக ஒன்றும் சொல்வதற்கில்லை; பாரதியார் தாம் கற்ற ஆங்கிலக் கல்வியைப் பற்றிப் பாடினாரே, செலவு தந்தைக்கோர் ஆயிரம் சென்றது, தீதெனக்குப் பல்லாயிரம் நேர்ந்தன என்று, அந்தக் கதைதான் ஆம், பாரதியாரைப் போலவே தம்பி தியாக ராஜனும் அந்தத் தீதிலிருந்து தப்பிவிட்டான். எப்படி?. . . அப்பா பள்ளிக்கூடத்துக்குப் போடா என்றால், பையன் திருச்சியில் உள்ள உய்யகொண்டான் ஆற்றுப் பாலத்துக்குப் போய்விடுவான். அந்தப் பாலத்திலிருந்த ஆற்றில் குதித்து ஆனந்தமாக நீந்துவதில்தான் அவனுக்கு எவ்வளவு ஆசை. ஆனாலும் சக மாணவர்கள் சும்மா இருப்பார்களா? அவர்களில் யாராவது அதைப் பார்த்து விட்டுப் போய் அவன் அப்பாவிடம் சொல்லி விடுவார்கள். அப்பா அவன் பள்ளிக்கூடம் போகாததைப் பற்றிக் கூட அவ்வளவு கவலைப்படமாட்டார்; தண்ணீரில் குதித்து நீந்துகிறானே, தப்பித் தவறி மூழ்கி வைத்தால் என்ன செய்வது? என்று தான் கவலை கொள்வார். வீட்டுக்கு வந்ததும், 'நீ பள்ளிக்கூடம் வேண்டுமானால் போகாமல் இரு; ஆற்றுக்கு மட்டும் போகாதே! என்று கண்டிப்பார்; 'சரி என்பான் பையன். ஆனால் அது அப்போதைக்குத்தான். அப்புறம், உய்யகொண்டான் பாலத்தையும் அவனால் மறக்க முடியாது; அதிலிருந்து ஆற்றில் குதித்து நீந்துவதையும் அவனால் நிறுத்தமுடியாது. தந்தைக்குத் தெரிந்து தானே நீந்தக் கூடாது? தெரியாமல் நீந்தினால் என்னவாம்?' என்று தன்னைத்தானே சமாதானம் செய்து கொண்டு அவன் பாட்டுக்கு நீந்திக்கொண்டே இருப்பான். அவன் போதாத