பக்கம்:எம். கே. டி. பாகவதர் கதை.pdf/121

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

118 'உங்களுக்கு எல்லாம் சிரிப்பாயிருக்கிறது" என்று ராமநாதன் முணுமுணுத்தார். - 'எனக்கும் சேர்த்து அழ. நீங்கள் இருக்கும்போது நான் வேறு அழுவானேன் என்றுதான் அழவில்லை' என்றார் பாகவதர், அப்போதும் அவரை விடாமல். இப்படி இவர்கள் பேசிக்கொண்டே செல்ல, இவர்களுக்கு முன்னால் கைகளில் கழிகளுடன் வந்திருந்த ஆட்கள் அங்கங்கே கழியை ஊன்றி ஆழம்பார்த்து, இவர்களைத் தக்க வழியில் அழைத்துச் சென்றார்கள். அக்கரையை இவர்கள் அடையும்போது மணி ஒன்றாகிவிட்டது. "இரவு எட்டுமணிக்கே நீங்கள் இங்கே வந்துவிடுவீர்கள் என்று நாங்கள் உங்களுக்காகச் சமைத்து வைத்திருந்தோம். இப்போது எல்லாம் ஆறி அவலாய்ப் போய் விட்டன. அதை எப்படிப்பரிமாறுவது என்றுதான் யோசனையாயிருக்கிறது! என்றார் நாடக நிர்வாகிகளில் ஒருவர். 'அடாடா இதைச் சொன்னதைவிடச் சொல்லா மலே இருந்திருக்கலாமே நீங்கள்?' என்றார் பாகவதர். 'ஏன்?" 'இதுவரை பசியே பெரிய மனசு பண்ணி எங்களை மறந்திருந்தது; இப்போது நீங்கள் அதற்கு எங்களை நினைவூட்டி விட்டீர்களே?" 'அதனாலென்ன, நீங்கள் தவறாக நினைக்க வில்லையென்றால்...?" 'மனிதன் பிறந்ததே பெரிய தவறு; அதைவிடப் பெரிய தவறுவேறொன்று இருக்கவா போகிறது? நீங்கள் இருப்பதைப் போடுங்கள்!' என்று பாகவதர் முதலில் சப்பணம் போட்டு உட்கார்ந்தார். அவரைத் தொடர்ந்து எல்லோரும் அப்படியே உட்கார்ந்தனர்.