பக்கம்:எம். கே. டி. பாகவதர் கதை.pdf/125

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

122 பாகவதரின் பவளக்கொடி நாடகம் நடந்தது. எஸ்.டி. சுப்புலட்சுமி பவளக்கொடி, பாகவதர் அர்ச்சுனன். ஜோடி தான் பிரசித்தி பெற்ற ஜோடியாயிற்றே, கூட்டத்திற்குக் கேட்கவா வேண்டும்? தியேட்டர் நிரம்பி வழிந்தது. பொதுமக்கள் மட்டும் அன்று அந்த நாடகத்தைப் பார்க்க வந்திருக்கவில்லை; படாதிபதிகள் சிலரும் பார்க்க வந்திருந்தார்கள். அவர்களில் ஒருவர் திரு ஏ.எல்.ஆர். எம். செட்டியார் என்பவராவர். ஏதாவது ஒரு நாடகம் வெற்றிகரமாக நடந்தால், அதை உடனே படமாக்கச் சில படாதிபதிகள் இப்போது முன்வருகிறார்களல்லவா? அந்த வழக்கத்துக்கு முதன் முதலில் வித்திட்ட பெருமை ஏ.எல்.ஆர். எம். மைத்தான் சேரும். அவருக்குப் பவளக்கொடி' நாடகத்தை ரொம்பப் பிடித்திருந்தது. தம் நண்பர் ஒருவரைக் கூட்டாளியாகச் சேர்த்துக்கொண்டு அவர் பவளக்கொடி' நாடகத்தை உடனே படமாக்க விரும்பினார். அப்படி ஒர் எண்ணம் பாகவதருக்கே அப்போது இருக்கத்தான் இருந்தது. ஆயினும் தமக்கே உரிய பெருந்தன்மையின் காரணமாக அவர் ஏ.எல்.ஆர்.எம்.மின் விருப்பத்துக்கு இணங்கித் தம் எண்ணத்தைக் கைவிட்டார். இனங்கிய பின் இன்னநடிகையைத்தான் தமக்கு ஜோடியாகப் போடவேண்டுமென்றோ, இன்ன நடிகர்தான் 'வில்லனாக வரவேண்டுமென்றோ, அவர் சொல்ல வில்லை. அது மட்டுமல்ல; இன்னார்தான் கதை - வசனம் எழுத வேண்டுமென்றோ, இன்னார்தான் பாடல் புனைய வேண்டுமென்றோ, இன்னார்தான் 'செட்'அமைக்க வேண்டு மென்றோ, இன்னார்தான் மேக்கப் போடவேண்டு மென்றோ, இன்னார்தான் லைட் பாயாக வந்து லைட் போடவேண்டுமென்றோ, இன்னார்தான் காமிராமேனாக