பக்கம்:எம். கே. டி. பாகவதர் கதை.pdf/126

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

123 வந்து படம் பிடிக்க வேண்டுமென்றோ, இன்னார்தான் டைரக்டராக வந்து டைரக்ட் செய்ய வேண்டுமென்றோ அவர் அடம் பிடிக்கவில்லை. இவையெல்லாவற்றும் மேலாக இருந்தது கொள்கை, கிள்கை என்று சொல்லிக் கொண்டு, தாம் நடிக்கும் பவளக்கொடி’படத்தில் சாட்சாத் கிருஷ்ணபரமாத்மாவுக்குப் பதிலாக யாராவது ஒரு 'சீர்திருத்தச் செம்மல் வந்து அர்ச்சுனனுக்கும், பவளக் கொடிக்கும் 'சீர்திருத்தத் திருமணம் செய்து வைக்க வேண்டுமென்று அவர் சொல்லாமல் விட்டது பாகவதர் கொள்கை என்று ஏதாவது ஒன்றை வைத்துக் கொண்டிருந்தார் என்றால் அது தொழில் வேறு, கொள்கை வேறு என்பதுதான். இரண்டையும் ஒன்றாகப் போட்டு அவர் என்றுமே குழப்பியதில்லை. அத்துடன், அவர் தம் வாழ்நாளில் தம்முடைய தலைவர் என்று யாரையும் ஏற்றுக்கொள்ளவில்லை. அப்படி யாரையாவது அவர் தலைவராக ஏற்றுக் கொண்டி ருந்தார் என்றால், அந்தத்தலைவர், தலைவர்களுக் கெல்லாம் தலைவரான கடவுள் என்றுதான் சொல்ல வேண்டும். அதனால் இன்று ஒரு தலைவர், நாளை ஒரு தலைவர், நாளை மறுநாள் ஒரு தலைவர், என்று தம் சுய நலத்துக்கு ஏற்றாற் போல் அவ்வப்போது தலைவர்களை மாற்றிக் கொண்டி ருக்க வேண்டிய அவசியமும் அவருக்கு இல்லாமற்போய் விட்டது. எல்லாம் பேசி முடிந்த பின், 'படத்தில் நடிப்பதற்கு நீங்கள் இப்போது எங்களிடத்தில் என்ன எதிர்பார்க்கி நீர்கள்?’ என்று ஏ.எல்.ஆர்.எம்.கேட்டார். "இதுவரை நான் யாரிடமும் எதையும் கேட்டுவாங்கியதில்லை; அவர்க ளாகவே கொடுப்பதைத்தான் வாங்கிக் கொண்டிருக்கிறேன். அதேமாதிரி நீங்களும் கொடுப்பதைக் கொடுங்கள்; திருப்தியுடன் வாங்கிக்கொண்டு சொன்னபடி நடித்துக் கொடுக்கிறேன்' என்றார் பாகவதர். -