பக்கம்:எம். கே. டி. பாகவதர் கதை.pdf/130

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

127 'ஏறக்குறைய இருபது வருடங்களுக்கு முன் ஒரு நாள் என்னுடைய உறவினர்களுடன் நான் ஆலய தரிசனம் செய்வதற்காகத் திருச்சி, தஞ்சை செல்லும் நோக்கத்துடன், பெங்களூரில் இரவு வண்டி ஏறி, விடியற்காலை ஈரோடுக்கு வந்து சேர்ந்தேன். அதற்குமேல் வண்டி போகாது என்று சொன்னார்கள். காரணம் என்னவென்று கேட்ட எனக்கு, அவர்கள் காட்டியது ஒரு மக்கள் சமுத்திரத்தை! சுமார் பத்தாயிரம்பேர் அங்குள்ள தண்டவாளத்தில் உட்கார்ந்து அடம்பிடித்துக் கொண்டிருந்தனர். மூன்று மணிநேரமாக அவர்கள் அப்படி உட்கார்ந்திருக்கலாம். எதற்காக? எம்.கே.டி.பாகவதர் எர்ணாகுளத்தில கச்சேரி செய்துவிட்டு, 'கொச்சி எக்ஸ்பிரஸில் வருகிறாராம். அந்த வண்டியை நிறுத்தி, பாகவதரை வெளியே வரச்சொல்லி அவர்கள் பார்க்கவேண்டுமாம். நானும் இறங்கி ஓர் உயரமான இடத்தைப் பிடித்துக் கொண்டு, மேலும் இரண்டு மணிநேரம் காத்திருந்தேன். வந்தது ரயில்; பிளாட்பாரத்திற்குள் நுழைய முடியாமல் நின்றது. சில நிமிஷங்கள் சென்றன. குங்குமப்பூ போல் சிவந்த மேனி, ஒளிவீசும் முகம் - ஆம், பாகவதர் வெளியே வந்து கைகூப்பி நின்றார். 'மேக்கப் போடாமலேயே ஒரு சினிமா நட்சத்திரம் இவ்வளவு அழகாக இருக்கமுடியுமா?’ என்று மக்கள் வியந்தனர். 'பாகவதருக்கு ஜே என்ற கோஷம் வானைப் பிளந்தது. மூன்று நான்கு முறை பாகவதர் மீண்டும் வெளியே வந்து கைகூப்பிய பிறகு, ஒருவாறாக அவர்கள் ரயிலை விட அனுமதித்தனர். இதனால் 'கொச்சி எக்ஸ் பிரஸ்'எத்தனை மணிநேரம் லேட் என்கிறீர்கள்? - ஐந்து மணிநேரம் லேட் ஒரு சினிமா நடிகருக்கு இத்தகைய வரவேற்பை, ஒரு வெறியுடன் கூடிய ஈடுபாட்டை மக்களிடையே நான்