பக்கம்:எம். கே. டி. பாகவதர் கதை.pdf/137

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

134 சொல்கிறீர்கள்?' என்று சீறி எழுந்து, துண்டை உதறித் தோளில் போட்டுக்கொண்டு, ரசிகர்களை அவமதித்தாவது தமக்கு மரியாதை தேடிக்கொள்ள வேண்டுமென்று நினைத்தாரா? இல்லை; சாம்பாரும் ரசமும் பரிமாறிக் கொண்டிருக்கும் போது 'மோர் பரிமாறுங்கள் என்று யாராவது கேட்பார்களா? அப்படிப் பரிமாறினால்தான் அது நன்றாகயிருக்குமா? கொஞ்சம் பொறுங்கள், அந்த சமயம் வரும்போது அதை நானே பரிமாறுவேன்' என்று சிரித்துக் கொண்டே சொல்லி, ரசிகர்களின் மதிப்பை உயர்த்திய தோடு, தம்முடைய மதிப்பையும் உயர்த்திக் கொண்டார். அவருடைய வெற்றியின் ரகசியங்களில் இதுவும் ஒன்று என்பதை அவருக்குப் பின்னால் வந்துள்ள பாடகர்கள் இது வரை உணரவில்லை; இனி மேலாவது உணரவேண்டும். அது மட்டுமா? மற்றவர்களுடைய கச்சேரிகளில் பொருத்தப்படும் ஒலிபெருக்கிகளெல்லாம் பெரும்பாலும் ரசிகர்களின் பக்கமாகவே இருக்கும்; ஒரே ஒரு ஒலிபெருக்கி கூடப் பாடகரின் பக்கமாக இருக்காது. ஆனால் பாகவதரின் கச்சேரிகளிலோ ஓர் ஒலிபெருக்கி அவசியம் அவருடைய விருப்பப்படி அவருக்கு முன்னால் பொருத்தப் பட்டிருக்கும். ஏன்? 'தாம் பாடுவதை ரசிகர்கள் மட்டும் கேட்டால் போதாது; தாமும் கேட்கவேண்டும்' என்று அவர் நினைத்தார். எதற்காக? 'அப்போதுதான் தாம் பாடுவதிலுள்ள குண விசேஷங்களையும், குணதோஷங்களையும் தம்மால் உணரமுடியும்; உணர்ந்து திருந்த முடியும் என்று அவர் நினைத்தார்.