பக்கம்:எம். கே. டி. பாகவதர் கதை.pdf/138

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

135 இந்த முறையை அவருக்குப் பின்னால் வந்துள்ள பாடகர்களும் பின்பற்றினால் எவ்வளவு நன்றாயிருக்கும்? பவளக்கொடி'க்கு அடுத்தபடியாகப் பாகவதர் நடித்த படம் 'சாரங்கதாரா. இதிலும் எஸ். டி. எஸ்.ஸ்ே அவருக்கு ஜோடியாக நடித்தார். கே. சுப்பிரமணியம் டைரக்ஷனில்தான் இந்தப் படமும் வளர்ந்தது. இப்போது சில படங்களில் ஒரு சில நட்சத்திரங்கள் வைத்ததுதான் சட்டம் என்று ஆகிவிட்டதல்லவா? அப்போது அப்படியில்லை; டைரக்டர்கள் வைத்ததுதான் சட்டமாயிருந்தது. காரணம், டைரக்ஷன் என்றால் என்ன?” என்று தெரிந்தவர்கள் மட்டுமே அந்த நாளில் டைரக்டராக முடிந்தது; அது தெரியாதவர்கள் ட்ைரக்டராக முடிய வில்லை. இப்போது?... - பிடிக்கவேண்டியவர்களைப் பிடித்து கொஞ்சம் இதமாக சொறிந்துவிட்டால் கூடப்போதும், யாரும் டைரக்டராகிவிடலாமே! இதன் காரணமாகச் சாரங்கதாரா படப்பிடிப்பின் போது பாகவதருக்கும் டைரக்டர் சுப்பிரமணியத்துக்கும் ஒரே ஒரு விஷயத்தில் கொஞ்சம் அபிப்பிராய பேதம் ஏற்பட்டது. "ஞானகுமாரி நளின சிங்காரி என்ற பாடலைத் தயவுசெய்து "சாரங்கதாரா'வில் சேர்த்துக்கொள்ள வேண்டும்' என்றார் பாகவதர்; அந்தப் பாடலுக்கும் சாரங்கதாரா'வுக்கும் என்ன சம்பந்தம்?' என்றார் டைரக்டர். சம்பந்தம் இல்லைதான். அதனால் என்ன, நீங்கள் நினைத்தால் ஏதாவது ஒரு விதத்தில் அதைச் சம்பந்தப் படுத்திக் கொண்டு விடலாமே! அது என்னால் பிரபலப் படுத்தப்பட்ட பாட்டு மட்டுமல்ல; ஆகிவந்த பாட்டும்கூட. அதை இந்தப் படத்தில் சேர்த்துக்கொண்டால் வெற்றி நிச்சயமாயிருக்குமென்று என் உள்மனம் ஏனோ அடிக்கடி