பக்கம்:எம். கே. டி. பாகவதர் கதை.pdf/139

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

136 குரல் கொடுத்துக் கொண்டே இருக்கிறது. அதனால்தான் சொல்கிறேன். அதற்கு மேல் உங்கள் இஷ்டம்' என்றார் பாகவதர். 'நோக்கம் நல்ல நோக்கமாயிருக்கும்போது நானும் அதற்குக் குறுக்கே நிற்கவிரும்பவில்லை; அப்படியே ஆகட்டும்' என்றார் டைரக்டர். படம் முடிந்து வெளியே வந்தது. பாகவதர் சொன்னது சொன்னபடி அதன் வெற்றி முழக்கம் விண்ணை அதிரவைத்தது. இந்த இரண்டு படங்களுக்குப் பிறகு எஸ்.டி. எஸ். பாகவதர் குழுவிலிருந்து விலகிக்கொண்டு விட்டார். காரணம் வேறேன்றும் இல்லை; கலைஞர்களுக்கு அவ்வப் போது இயற்கையாக ஏற்படும் உணர்ச்சி மாறாட்டங்கள் தான. இந்தப் பிரிவு பாகவதரைச் சற்றே கலங்கவைத்தது என்னவோ உண்மைதான். ஆனாலும் அதற்காக அவர் சோர்ந்து விடவில்லை; 'தியாகராஜா பிலிம்ஸ்’ என்று தம் பெயராலேயே அவர் ஒரு சொந்த நிறுவனத்தைத் திருச்சியில் நிறுவினார். ஸ்டண்ட் படம் ஒன்று எடுத்தால் என்ன? என்று தோன்றிற்று; அதற்காகச் சத்தியசீலன் என்ற கதையைத் தேர்ந்தெடுத்தார். அப்போதிருந்த மனநிலையில் அவர் அந்தப் படத்தைச் சென்னையில் எடுக்க விரும்பவில்லை; பம்பாய்க்குப் போய் எடுத்தார். 'சத்தியசீலனில் அவருக்கு ஜோடியாக நடித்தவர் தேவசேனா. அவர் சொன்னபடி ஒருநாள் ஷல்ட்டிங்'குக்கு வரவில்லை. அதற்காகப் பாகவதர் என்ன செய்தார் என்கிறீர்கள்? மறுநாள் வந்ததும், 'இன்று அவுட்டோர் ஷல்ட்டிங்' என்று ஒரு போடு போட்டார். "எங்கே?' என்றார் தேவசேனா. 'அடுத்தாற்போல் உள்ள மலைச்சாரலில்' என்றார் அவர்.