பக்கம்:எம். கே. டி. பாகவதர் கதை.pdf/141

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

138 பாகவதர் சிரித்தார்! 'ஏன் சிரிக்கிறீர்கள்?' என்றார் தேவசேனா ஒன்றும் புரியாமல். காமிராவைக் காட்டினார் பாகவதர். அதில் பிலிம் இல்லை 'அடக் கடவுளே! இதற்குத்தானா நான் அத்தனை பாடுபட்டு நடித்தேன்?" என்றார் தேவசேனா. 'நேற்று ஏன் ஷல்ட்டிங்'குக்கு வரவில்லை 7 அதற்குத்தான் இந்தத் தண்டனை' என்றார் பாகவதர். எல்லோரும் சிரித்தார்கள்; தேவசேனாவும் நடந்ததை மறந்து அவர்களுடைய சிரிப்பில் கலந்து கொண்டார். ராதே உனக்குக் கோபம் ஆகாதடி!... "எம்.ஜி.ஆர்.தானே? அவருடன் எந்த நடிகையை போட்டாலும் படம் ஓடிவிடும்!” 'சிவாஜிகணேசன்தானே? அவருட்ன் எந்த நடிகையை போட்டாலும் படம் ஓடிவிடும்!" இம்மாதிரிப் பேச்சுக்கள் சினிமா உலகில் இப்போது சர்வசாதாரணமாகப் பேசப்படுவதை நாம் கேட்கிறோம். இதன் பொருள் என்ன? ஒரு படத்தின் வெற்றிக்கு நடிகைகள் முக்கியமல்ல; நடிகர்கள்தான் முக்கியம் என்பதேயாகும். அதாவது, அவர்கள் இருவருடைய படங்களைப் பொறுத்தவரை! இந்த நட்சத்திரப் பெருமையையும் முதன் முதலில் நடிகர் உலகத்துக்கு தேடிவைத்தவர் எம்.கே.டி. பாகவதர் தான்! எம். கே. டி. யின் முதல் இரண்டு படங்களான 'பவளக்கொடி'யிலும் சாரங்கதாரா'விலும் அவருடன்