பக்கம்:எம். கே. டி. பாகவதர் கதை.pdf/146

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

143 சோழநாட்டு அரசனான முதல் குலோத்துங்கன், கலிங்க நாட்டு மன்னனான சோடகங்கனைப் போரில் தோற்கடித்து விட்டு, மும்முரசுகள் முழங்க, வெற்றிக் கொடியுடன் தன் தலைநகரான உறையூருக்குள் பிரவே சிக்கிறான். அரசன் தன்னுடைய வெற்றி விழாவை தர்பாரில் கொண்டாடிக்கொண்டிருக்கும்போது, கவிச் சக்கரவர்த்தி யான கம்பர் தம் ராமாயணத்தை பூரீரங்கத்தில் அரங்கேற்றி விட்டு மிகுந்த குதுகலத்துடன் அங்கே வருகிறார். புவிச் சக்கரவர்த்தி, கவிச்சக்கரவர்த்தியை மிகவும் பாராட்டிப் பேசி, போர்க்களத்தில் தன் உயிரைக் காப்பாற்றிய கம்பர் மகன் அம்பிகாபதிக்கு வைர வாள் ஒன்றைச் சன்மானமாக அளிக்கிறான். ஜெயகோஷத்துடன் சபை கலைகிறது. மறுநாள் சேனாதிபதி ருத்ரசேனனும், அம்பிகா பதியும் அரண்மனைக்கருகே சந்திக்கின்றனர். அம்பிகா பதியின் இடையிலிருந்த வைர வாளின் காரணமாக எழுந்த வார்த்தைகள் வலுத்து, அவர்கள் இருவரையும் கடைசியாக வாட்போரில் கொண்டு வந்துவிடுகிறது. அந்தப் போரில் ருத்ரசேனன் தோல்வியுற்றுக் கீழே விழுகிறான். இப்போரை உப்பரிகையிலிருந்து கவனித்துக் கொண்டிருந்த அமராவதியும், அவள் தோழி சுந்தரியும் கைகொட்டிச் சிரிக்கிறார்கள். ருத்ரசேனன் அவமானத்தால் வெட்கிச் செல்கிறான். அம்பிகாபதியின் வீரம், அழகு ஆகியவை அமராவதியின் மனத்தைக் கவர்கின்றன. அவள் அவன்மேல் மட்டற்ற காதல் கொள்கிறாள். ஒருநாள் இரவு அமராவதி, அம்பிகாபதியின் வரவை எதிர்நோக்கி உப்பரிகையில் இருக்க, அவன் அவளுடைய உப்பரிகையின் சமீபமாக வந்து நிற்கிறான். இளவரசி மாடியின் மேல் இருந்தபடி அம்பிகாபதியுடன் உரையாடுகிறாள். இன்றிரவு அரும்பும் நம்காதல் அரும்பு அடுத்ததடவை சந்திக்கும்போது, வசந்தத்தின் தென்றலால்