பக்கம்:எம். கே. டி. பாகவதர் கதை.pdf/148

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

145 கையிலேந்தி அமராவதி வருகிறாள். அவளை அந்தக் கோலத்தில் கண்ட அம்பிகாபதி அவள் அழகில் மயங்கித் தன்னை மறந்து, "இட்டஅடி நோக எடுத்தஅடி கொப்பளிக்க வட்டில் சுமந்து மருங் கசைய என்று பாட ஆரம்பிக்கிறான். இதனால் அம்பிகாபதிக்கு ஏற்படப் போகும் ஆபத்தை உணர்ந்த கம்பர், உடனே கலைவாணியைத் தியானித்து, அம்பிகாபதி பாட ஆரம்பித்த செய்யுளை, கொட்டிக் கிழங்கோ கிழங்கென்று கூவுவாள் நாவில் வழங் கோசை வையம் பெறும்!" என்று பாடிமுடிக்க, சாட்சாத் சரஸ்வதி தேவியும் அதற் கேற்றாற்போல் அங்காடிக் கூடைக்காரியாகி அப்போது அந்த வழியே கொட்டிக் கிழங்கோ கிழங்கு என்று கூவிக்கொண்டேவர, அரசனும் மற்றவர்களும் சந்தேகம் தீர்ந்து, கம்பரையும் அம்பிகாபதியையும் ஒருங்கே பாராட்டி மகிழ்கின்றனர். இன்னொருநாள் நடுநிசி; எங்கும் நிசப்தம். இடையில் உடைவாள் அணிந்த ஓர் உருவம் அரண்மனையில் உள்ள அமராவதியின் உப்பரிகையின் மேல் மெதுவாக ஏறி, அமராவதியின் பள்ளியறைக்குள் நுழைகிறது. ஆழ்ந்த நித்திரையிலிருந்த அமராவதியை அது தூக்கிக்கொண்டு போக முயலும்போது, விழித்துக் கொண்டுவிட்ட அமராவதி கூச்சலிடுகிறாள். அவளுடைய கூச்சலைக் கேட்ட தோழிகளும் காவலாட்களும் அங்கே விரைந்து வருகின்றனர். காவலர்களுக்கும் அந்த உருவத்துக்கும் வாட்போர் நடக்கிறது. அப்போரில் படுகாய மடைந்த அவ்வுருவம் உப்பரிகையிலிருந்து கீழே விழுந்து உயிர்விடுகிறது. அந்த உருவம் யாருடைய உருவம் என்பதை எம்.கே.டி.10