பக்கம்:எம். கே. டி. பாகவதர் கதை.pdf/149

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

146 அறியக் காவலர்கள் ஒடிப் போய்ப்பார்க்கிறார்கள். அது ருத்ரசேனனின் உருவம் என்று தெரிகிறது. அந்த வருடம் வழக்கம்போல் சோழ நாடெங்கும் 'கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடப்படுகிறது. அவ்விழாவை முன்னிட்டு அரண்மனையில் ஓர் இசைக் கச்சேரிக்கு ஏற்பாடு செய்யப்படுகிறது. அவையில் அரசனும், புலவர் பெருமக்களும் வீற்றிருக்கின்றனர். சபையில் அமர்ந்திருந்த அம்பிகாபதியும், உப்பரிகையிலிருந்த அமராவதியும் ஒருவரையொருவர் பார்ப்பதும் சிரிப்பதுமாக இருக் கின்றனர். இசை நிகழ்ச்சி முடியுமுன் தன்னுடனிருந்த தாய்க்குக் கூடத் தெரியாமல் அமராவதி அவ்விடத்தை விட்டுச் சென்று விடுகிறாள். அதே சமயத்தில் அம்பிகா பதியும் அவையைவிட்டு எழுந்து வெளியே செல்கிறான். இருவரும் கிளி மண்டபத்தில் சந்தித்து ஒருவரையொருவர் ஆலிங்கனம் செய்து கொண்டிருக் கையில் இவர்களைப் பின்தொடர்ந்து வந்த அரசன் தன் உடைவாளால் அம்பிகா பதியை அக்கணமே குத்திக் கொல்லமுயல்கிறான்; அமராவதி குறுக்கிடுகிறாள். அவளை உதறித் தள்ளிவிட்டு, அவ்விடத்துக்குக் கம்பரையும், ஒட்டக்கூத்தரையும் வரவழைத்து, கள்ளனும் கள்ளியும் கையும் மெய்யுமாகப் பிடிபட்டதை நிரூபித்துக் காட்டி, அம்பிகாபதியைச் சிறையிலிட்டு, அடுத்தநாளே அவனுக்கு மரணதண்ட னையும் விதித்துவிடுகிறான் அரசன். கம்பரின் வேண்டுகோளுக்கு இணங்கி, ஒட்டக் கூத்தர் அரசனுக்கு ஒரு யோசனை சொல்கிறார். அம்பிகாபதி சிற்றின்பத்தை விட்டுப் பேரின்பத்தைப் பொருளாகக் கொண்டு நூறு பாடல்கள் பாடினால் அவனுக்கு விதித்த மரண தண்டனையை ரத்துச் செய்து விடலாம் என்பதே அந்த யோசனை. அரசன் அதற்குச் சம்மதிக்கிறான்.