பக்கம்:எம். கே. டி. பாகவதர் கதை.pdf/15

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12 காசைக் கொண்டு அதை வாங்கித் தின்றுவிட்டு மண்ணெண் ணெய்க்குப் பதிலாகப் புட்டியில் தண்ணிரை நிரப்பிக் கொண்டு வீட்டுக்கு வந்தான். தாயார் உண்மையை அறியாமல் அவன் கொண்டு வந்த தண்ணீரை விளக்கில் ஊற்றி ஏற்ற முயன்றாள். மலைக் கோட்டை விநாயகரே, என்னைக் காட்டிக் கொடுத்துவிடாதே! உன் அருளால், தண்ணீர் மண்ணெண்ணெயாக மாறட்டும் விளக்கும் தட்டாமல் எரியட்டும் என்று மானசீகமாகத் தொப்பை யப்பனை வேண்டினான் பையன். இந்த மாதிரி காரியத்துக் கெல்லாம் அவர் கை கொடுப்பாரா? கை விட்டுவிட்டார்; குட்டு வெளிப்பட்டுவிட்டது. ‘ஏண்டா, இப்படிக் கூடச் செய்யலாமா?’ என்றாள் தாயார்; நான் என்னம்மா செய்வேன்? அவன் ஏன் அரிசி முறுக்கை எடுத்துக்கொண்டு எனக்கு எதிரே வர வேண்டுமாம் என்றான் பையன். தாயார் சிரிக்கவில்லை; அழுதாள் ஏன்?. . . கேவலம், ஒரு முறுக்குக்காகக் குழந்தை இந்த அளவுக்குத் துணியும் விதத்திலல்லவா நம் குடும்ப நிலை இருக்கிறது? இதற்கு ஒரு முடிவே கிடையாதா? தாயார் கண்ணிரைத் துடைத்துக் கொண்டே பெருமூச்சு விட்டாள். தியாகராஜனுக்கு 'ஒன்றுமில்லை’ என்று சொல்லிக் கொண்டே அவள் அவனை விட்டு அப்பால் போய் விட்டாள். ஆம், எழிலிசை மன்னர் திரு எம்.கே. தியாகராஜ பாகவதர் ஏழைக் குடும்பத்தில் பிறந்தவர்தான்; அவருக்கு இருந்த சொத்தெல்லாம் அவருடைய பாட்டனார் முத்து வேல் ஆச்சாரி திருச்சி பாலக்கரையில் விட்டுச் சென்றிருந்த ஒட்டுவில்லை வீடு ஒன்றுதான். அதன் மேலும் கடன் வாங்கிக் காலம் தள்ளவேண்டிய நிர்ப்பந்தம் அவருடைய தகப்பனார் கிருஷ்ணமூர்த்திக்கு. இந்த நிலையில் இரண்டே இரண்டு ரூபாய் கூலி கிடைக்கக்கூடிய வேலையைக்