பக்கம்:எம். கே. டி. பாகவதர் கதை.pdf/152

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

149 'என்ன வந்துவிட்டது' 'என்றார் இசைவாணர். 'திருநீலகண்டரில் நாமும் ஒரு பாட்டுப்பாடி வைக்க வேண்டுமே, என்ன பாட்டுப்பாடலாம் என்று யோசித்துக் கொண்டிருந்தேன்; அந்தப்பாட்டுக்கு இப்போது 'ஐடியா வந்துவிட்டது'என்றார் என்.எஸ்.கே. 'என்ன ஐடியா?" என்றார் எம்.கே.டி. காமன் கதையைப் பாட்டாகப் பாடுவதுதான் நம்முடைய கிராமங்களில் வழக்கமாயிற்றே? நானும் துரைராஜும் எரிந்த கட்சி, எரியாத கட்சி'யாயிருந்து, இதே 'லாவணியைப் பாடிவிட்டால் என்ன?’ என்றார் கிருஷ்ணன். 'அப்படியே செய்யுங்கள்!' என்று சொல்லி விட்டார் பாகவதர். அப்புறம் கேட்கவேண்டுமா? கலைவாணரின் கருத்துக்கிணங்க, அந்தப் படத்தில் 'மருதை'யாக நடித்த டி.எஸ்.துரைராஜ் பாடினார்: "பங்கையன் நாவில் வாழும் பான்மைபோல் அடியேன்.நாவில் மங்கையே நீ இருந்து மாரவேள் கதை பாடம்மா! துங்கமெய்ஞ் ஞான வாழ்வே, சுருதிவியாகரணமுடிவில் தங்கியே பொருளை ஏத்தி சரஸ்வதி நீ காப்பாயே!” என்ற விருத்தத்தை அவர் பாடி முடித்து, பாட்டை இப்படி ஆரம்பித்தார். "மங்களமே மிகுந்த மாசிப் பிறையதனில் மகரக் கொடியதனை நாட்டி நாட்டி, சங்கையில்லாமல் டேப்பு துந்தனாத் தாளத்தோடு சரமண்டலி மோர்சிங்கு கூட்டி கூட்டி,