பக்கம்:எம். கே. டி. பாகவதர் கதை.pdf/153

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

150 சனகாதி நால்வருக்காய் கல்ஆலின் கீழிருந்து சங்கரன்மீது மதன் கணை தொடுத்து அனலாய் எரிந்தழிந்த இந்தச் சரித்திரத்தை ஆகம விதிப்படி கவி தொடுத்து...” இந்த இடத்தில்தான் 'சொக்க 'னாக நடித்த என்.எஸ். கே. குறுக்கிட்டு. “காமன் கதை பாடவந்த ஆரம்பத்தில் நாவில் அவள் குடியிருப்பாள் என்றதென்ன? நாலுபேர் அறிய அதைக் கூறுமாதே' என்ற விருத்தத்தைப் பாடிவிட்டு, "கல்விக்குத் தமிழ்ச்செல்வி என்றொரு பெண்ணைக் கைதொழுதீரே, அந்த மங்கை மங்கை, மறையவன் நாவில் அவள் உறைவது நிஜமானால் மலஜலம் கழிப்பது எங்கே, எங்கே?" என்று கேட்டு, அந்த நாளிலேயே, அந்தப் படத்திலேயே தம் 'பகுத்தறிவுப் பிரசாரத்தை ஆரம்பித்து வைத்தார். அதற்காக அவர் தம் நகைச்சுவையையும் கைவிட்டுவிடவில்லை; "அந்தக் கணபதிக்குத் தொந்தி வந்த விதத்தைத் தெரியச் சொல்லும் எந்தன் முன்னே முன்னே!" என்று 'மருதை'யாக நடித்த டி.எஸ்.கே. திருதிருவென்று விழித்து திக்கு முக்காடித் திண்டாடி. "ஆந்தக் கணபதிக்கு. அந்தக் கணபதிக்கு - தொந்தி பெருத்தவிதம், தொந்தி பெருத்தவிதம். கொழுக்கட்டை தின்னதினால் அண்ணே, அண்ணே!" என்று சொன்னதைக் கேட்டுச் சிரிக்காதவர் யார்? இப்படிக் சிரிப்புக்கிடையே சிந்தனையையும் தூண்டிவிட்ட பெருமை கலைவாணரைச் சேர்ந்ததுதான் என்றாலும், அந்த முயற்சிக்கு எடுக்கும்போதே இடம்