பக்கம்:எம். கே. டி. பாகவதர் கதை.pdf/154

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

151 கொடுத்து, அந்த வகையில் அவரை ஊக்கிவிட்ட பெருமை இசைவாணரையே சேரும். அதுமட்டுமா? ஆத்திகனுக்கு ஆத்திகன் நண்பனா யிருக்கலாம்; நாத்திகனுக்கு நாத்திகன் நண்பனாயிருக்கலாம். ஆத்திகனுக்கு நாத்திகனும், நாத்திகனுக்கு ஆத்திகனும் நண்பனாயிருக்க முடியுமா? 'இருக்கமுடியும் என்று நிரூபித்துக் காட்டியவர்கள் இசைவாணரும், கலைவாணரும் ஆவார்கள். அதற்கு வேண்டிய பரந்த மனம் பாகவதரிடம் இருந்தது. அது மட்டுமல்ல; உன்னை நான் நேசிக்கிறேன்; உண்மை. அதற்காக உன் கொள்கையை, கோட்பாட்டை நான் நேசிக்கமாட்டேன்' என்று சொல்வதற்கு வேண்டிய உரமும் அவருடைய நெஞ்சில் இருந்தது, இல்லையென்றால் தெய்வ பக்திமிக்க பாகவதர், அந்த தெய்வபக்திக்காகவே 'திருநீலகண்டரை எடுத்த பாவகதர், அப்படி ஒரு காட்சியை அதில் புகுத்த என்.எஸ்.கிருஷ்ணனை அனுமதித்திருப்பாரா? அவருடைய பெருந்தன்மைக்கு இதோ இன்னும் ஓர் எடுத்துக்காட்டு: 'திருநீலகண்ட'ரில் ஒரு காட்சி; அந்தக் காட்சியில் யோகியாக நடித்த சிறுகளத்தூர் சாமா, நீலகண்டராக நடித்த பாகவதரை உதைத்துத் தள்ளவேண்டும். வெறும்.நடிப்புத்தான்; இருந்தாலும் மனம் வர வில்லை சாமாவுக்கு. "பாகவதரையா? நானா? உதைப்பதா? மாட்டேன், மாட்டவே மாட்டேன்!” என்றார். கண்டிப்புக்குப் பெயர் போன டைரக்டரான ராஜா சாண்டோ, "உதைக்கத்தான் வேண்டும்!" என்றார். 'இவர் புகழ்பெற்ற பாகவதர் மட்டுமல்ல; நம்முடைய முதலாளியுங்கூட. எப்படி உதைப்பேன்?" என்று சாமா தயங்கினார்.