பக்கம்:எம். கே. டி. பாகவதர் கதை.pdf/159

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

156 மாதருக்கு அச்சம், நாணம், மடம், பயிர்ப்பு என்று சொல்வார்களே, அந்த நால்வகைக் குணங்களும் பாகவதரைக் கண்ட மாத்திரத்தில் பஞ்சாய்ப் பறந்தன. அவருடைய மோகனமான செளந்தரியத்திலிருந்து அந்தப் பெண்களைக் காக்க அவரவர்களுக்கு உரியவர்கள் படாத பாடு படவேண்டியிருந்தது. 'நீலகண்ட'ருக்காக வெளிப்புறக் காட்சிகள் சிலவற்றை எடுப்பதற்குப் பாகவதர் சிதம்பரம் வந்திருந்த போது, அவரைச் சூழ்ந்துகொண்ட பெண்களை விலக்கப் போலீசார் வரவேண்டியிருந்தது என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்! ஆனானப்பட்ட விசுவாமித்திரராலேயே ஒரு மேகலையை வெல்ல முடியவில்லையென்றால், பாகவத ரால் அத்தனை 'மேகலை’களை எப்படி வெல்லமுடியும்? பிறருடைய பொறாமையை வளர்ப்பதற்குப் பெரிதும் துணையாயிருந்த இந்த ஓர் அம்சமே பாகவதரின் வளர்ச்சிக்கு மட்டுமல்ல, வீழ்ச்சிக்கும் காரணமாயிருந்தது என்பதை இங்கே நான் வருத்தத்துடன் குறிப்பிடத்தான் வேண்டியிருக்கிறது. இது தமிழிசையின் துர்ப்பாக்கியமேயாகும். இல்லாவிட்டால் கேட்ட மாத்திரத்தில் சிலரைச் காதவழி ஒடவைக்கும் கர்நாடக இசையைக்கூட "மெல்லிசை” யாக்கிப்பாடி, மக்கள் அனைவரையுமே மகிழ்வித்த அந்த மேதையை இதற்குள் நாம் இழந்திருக்கமாட்டோம். பாகவதரிடம் இயல்பாகவே அப்போது புகை பிடிக்கும் வழக்கமில்லை; மது அருந்தும் வழக்கமும் இல்லை. அவை இரண்டும் இல்லை என்பதற்காகப் பிற மங்கையருடன் பேசும் வழக்கத்தையாவது அவர் இளங்கோவனுக்கு முன்னால் வைத்துக் கொண்டாரா என்றால் அதுதான் இல்லை. எழுத்தை மதிக்கத் தெரிந்