பக்கம்:எம். கே. டி. பாகவதர் கதை.pdf/16

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

13 கொண்டு வந்து கொடுக்கும் தம்முடைய வாடிக்கையாள ரிடம் கூட அவர் என்ன சொல்வாராம், தெரியுமா? 'ஐயா நாளை மாலை உம்முடைய வேலை முடிந்துவிடும். நீர் மறக்காமல் வந்து இரண்டு ரூபாயைக் கொடுத்துவிட்டு உம்முடைய நகையை வாங்கிக் கொண்டு போய்விடும். இல்லாவிட்டால் கூலி இரண்டு ரூபாயோடு நிற்காது; வட்டியும் சேர்ந்துவிடும்' என்பாராம். சொன்னது சொன்னபடி குறித்த நேரத்தில் அந்த வாடிக்கையாளர் வந்து தம்முடைய நகையை வாங்கிக் கொண்டு போகாவிட்டால் அதைக்கொண்டு போய் அவர் தமக்கு சேரவேண்டிய கூலிக்காக அடகு வைத்து இரண்டு ரூபாய் வாங்கிக் கொண்டு வந்து தம் மனைவியிடம் வீட்டுச் செலவுக்காகக் கொடுத்து விடுவாராம். அதற்குப் பிறகு வாடிக்கையாளர் வந்தால், என்னுடைய நிலையை நான் நேற்றே உம்மிடம் சொன்னேனோ, இல்லையோ? நீர் ஏன் நேற்றே நான் சொன்னபடி வரவில்லை? இந்தாரும், அடகுச் சீட்டு; போய் வட்டி கொடுத்து வாங்கிக்கொள்ளும்: என்பாராம். தம்முடைய கூலிக்கு மேல் ஒரு பைசாக்கூட வாங்காத அவருடைய பெருந்தன்மையைப் பாராட்டிக் கொண்டே செல்வாராம் வாடிக்கையாளர். எவ்வளவு கொடிய வறுமை! ஞானக்கண் ஒன்று இருந்திடும் போதினிலே... வீட்டில் என்னதான் வறுமையாயிருந்தாலும் அது தங்கள் குழந்தைக்குத் தெரியக்கூடாது, தெரிந்தால் அதன் வளர்ச்சி குன்றிப்போகும் என்று நினைப்பது தாய் தந்தை யரின் இயல்பு அல்லவா? அந்த இயல்பை ஒட்டியே கிருஷ்ணமூர்த்தி தம்பதியினரும் குழந்தை தியாகராஜனை வளர்த்து வந்தார்கள்.