பக்கம்:எம். கே. டி. பாகவதர் கதை.pdf/160

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

157 திருந்தது. அதன் காரணமாக அவர் இளங்கோவனிடம் மட்டுமல்ல, எல்லா எழுத்தாளர்களிடமுமே மதிப்பும் மரியாதையும் வைத்திருந்தார். 'நீலகண்டரில் தாசி கலாவல்லி வரும் காட்சிகள் அவ்வளவு தத்ரூபமாக அமைந்திருந்ததற்குக் காரணம் ஒரு விதத்தில் இளங்கோவனும் பாகவதரும்தான் என்றாலும், இன்னொரு விதத்தில் கொத்தமங்கலம் திரு சுப்புவும் அதற்குக் காரணம் என்று சொல்ல வேண்டும். அந்தக் காட்சிகளில் அவர் 'மாமா வேடத்தை ஏற்று நடித்திருந்த விதம் அடாடா!'அசல் மாமாக்"களைக் கூடத் துக்கி அடித்துவிட்டார் என்றே சொல்லவேண்டும். அத்தகைய சிறப்பு வாய்ந்த நடிகர் இன்று கதை வசனம் டைரக்ஷன் என்று போய், எதிலும் கால் ஊன்ற முடியாமல் நிற்பது நம்மனதுக்கு எவ்வளவு சங்கட மாயிருக்கிறது! அதே மாதிரிதான் திரு சீதாராமனும் - இளங்கோ வன் வசனம் எழுதிய ஏழை படும் பாட்டில் அவர் ஜாவராக நடித்தது இன்றும் நம் நினைவில் நிற்கிறது. மற்றவை... இதைத்தான் தலையெழுத்து என்று சொல்கிறார்கள் போலும்! 'திருநீலகண்டர் படப்பிடிப்பின் போதுதான் இரண்டாவது உலக மகா யுத்தம் மூண்டது. அந்தச் சந்தர்ப்பத்தில் தான் பாகவதரின் இன்னொரு விஷேசமான குணமும் வெளிப்பட்டது. அதாவது, சமீபத்தில் தனி நபர் வழிபாடு கூடாது. அதனால் தேசத்துக்கும் சரி, தேச மக்களுக்கும் சரி; நன்மையில்லை என்று ஒரு புதிய முழக்கத்தை இந்த உலகமே அதிரமுழங்கி, ரஷ்யாவில் இருந்த ஸ்டாலின் வழிபாட்டைத் தூக்கிஎறிந்தாரல்லவா.குருஷ்சேவ், அந்தத்