பக்கம்:எம். கே. டி. பாகவதர் கதை.pdf/165

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

162 கொண்டிருக்கிறாள்' என்று சொல்லப் போகிறீர்கள்; அப்படித் தானே?' என்றார் பாகவதர், சர்வசாதாரணமாக, என்.எஸ். கிருஷ்ணனுக்கு ஆச்சரியம் தாங்க வில்லை. 'அது தெரிந்துமா அவளுக்குப் பத்து ரூபாய் கொடுக்கச்சொன்னீர்?' என்றார் வியப்புடன். "ஆமாம். ' நான் ஏமாந்து போய்க் கொடுக்கச் சொன்னதாக அல்லவா நினைத்தேன்?" 'ஏமாறாமல் நாம் யாருக்கு என்ன கொடுத்து விடுகிறோம்?" இதைக் கேட்டதும் என்.எஸ்.கிருஷ்ணனுக்குத் தூக்கிவாரிப்போட்டது போலிருந்தது. "எவ்வளவு பெரிய உண்மையை எவ்வளவு சர்வசாதாரணமாகச் சொல்லி விட்டீர் என்று சொல்லிக் கொண்டே அவர் ஒரு கணம் அப்படியே நின்றார். மறுகணம்உண்மை; நீர் சொன்னது, முக்காலும் உண்மை; முற்றிலும் உண்மை. எந்த மனிதனும் ஏதாவது ஒரு விதத்தில் ஏமாறாமல் யாருக்கும் எதையும் கொடுத்துவிடுவதில்லை; ஏமாந்தே கொடுக்கிறான். காரணம், பொதுநலத்தைப் பற்றி அவன் என்னதான் வாய்கிழியப் பேசினாலும் உடன் பிறந்த சுயநலம் அவனை விட்டு எந்த நிலையிலும் போகாமல் இருப்பதுதான்' என்றார். 'அதனால்தான் அவனிடம் உதவி பெற வருபவர் களும் ஏதாவது ஒரு விதத்தில் அவனை ஏமாற்றியே உதவி பெறப்பார்க்கிறார்கள். அதற்கு இங்கே வந்த பிச்சைக்காரி மட்டும் எப்படி விதி விலக்காயிருக்க முடியும்?' என்றார் பாகவதர். இதைக்கேட்டதும் என்.எஸ்.கிருஷ்ணனுக்கு என்ன தோன்றிற்றோ என்னமோ, 'இதில் நம்மைப் போன்றவர்க ளுக்கு இன்னொரு ஆபத்து இருக்கிறது!' என்றார்.