பக்கம்:எம். கே. டி. பாகவதர் கதை.pdf/167

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

164 கொண்டாடுவதென்று தீர்மானித்தார்கள். அந்த விழா வுக்குத் தலைமை தாங்க யாரை அழைக்கலாம் என்ற பேச்சு வந்த போது பாகவதர் சொன்னார்: 'சத்தியமூர்த்தியை அழையுங்கள்' ஆம், யுத்த நிதிக்கு உதவி நாடகங்கள் நடத்திக் கொடுத்ததற்காக எந்தச் சத்தியமூர்த்தி தம்முடைய பாகவதர் பட்டத்தைப் பறித்துவிடுவேன் என்று மிரட்டினாரோ, அந்தச் சத்தியமூர்த்தியைத்தான் அவர் அழைக்கச் சொன்னார். அப்படியே அழைத்தார்கள்; அவரும் மகிழ்ச்சி யுடன் அழைப்பை ஏற்றுக்கொண்டு விழாவுக்கு வந்தார். பாகவதரையும் அவருடைய பாட்டின் திறத்தையும் வாயாற, மனமாறப் பாராட்டிவிட்டுத் தமக்கு அவர் அணிவித்த மலர்மாலையைக் கழற்றி அவருக்கு அணிவிக்கப்போனார். அதை ஏற்றுக் கொள்வதற்காகப் பாகவதர் சற்றே குனிந்தபோது, அவருடைய சரிகை அங்கவஸ்திரம் நழுவிக் கீழே விழுந்தது. அதை எடுப்பதற்காக மேலும் குனிந்த அவரைத் தடுத்து, 'இன்றுடன் இந்த சில்க் சட்டையையும் சரிகை அங்கவஸ்திரத்தையும் விட்டுவிடுங்கள். அவற் றுக்குப் பதிலாகக் கதர் ஜிப்பாவையும் கதர் அங்க வஸ்திரத்தையும் அணியுங்கள் என்று சொல்லிக் கொண்டே தாம் அணிந்திருந்த அங்கவஸ்திரத்தை எடுத்து அப்போதே அவர் கழுத்தில் போட்டும் விட்டார் சத்தியமூர்த்தி. ரசிகர்களின் உற்சாகத்திற்குக் கேட்க வேண்டுமா? காற்றில் உதிரும்புளியம்பழங்களைப் போல் கைதட்டி ஆரவாரித்து, அவர் சொன்னதை அப்படியே ஆமோதித் தார்கள். அன்றிலிருந்து பாகவதரின் சில்க் சட்டை மறைந்தது; சரிகை அங்கவஸ்திரமும் மறைந்தது.