167 மற்றொரு பக்கம் மலைப்பு - இப்படியாக அன்றையக் கச்சேரி நடந்துகொண்டிருந்தது. இடையில் அங்கே வந்திருந்த பெரியோர்களின் ஆசியைப் பெறுவதற்காக டாக்டர் செட்டியார் அவர்கள் உள்ளே பிரவேசித்ததுதான் தாமதம், 'கொடையில் சிறந்த கோட்டையூரா என்று கம்பீரமாகத் தம் குரலை ஒரு தூக்குத்துக்கிப்பாட ஆரம்பித்தார் பாகவதர். அவ்வளவு தான்; அங்கே எழுந்த கையொலி கோட்டையூர் முழுவதையுமே கலகலக்க வைத்தது. ஆகா! என்றனர் சிலர் ஆகாகா என்றனர் பலர். இவர்களுக்கிடையே இன்னும் ஒர் ஒலி கேட்கிறதே, அது என்ன ஒலி? ... பாடிக்கொண்டே அதைக் காது கொடுத்துக் கேட்கிறார் பாகவதர். 'சூச்சூ!’ என்று 'சூ கொட்டுவோர் ஒரு பக்கம்; 'அடாடா என்று அனுதாபம் காட்டுவோர் இன்னொரு பக்கம்... எதற்காக இந்த அனுதாபம்? யாருக்காக இந்த அனுதாபம்?... பாடிக்கொண்டே அதையும் கவனிக்கிறார்; பாக வதருக்கு புரிந்துவிடுகிறது; அவருக்கு மிக நன்றாகப் புரிந்து விடுகிறது. ஆம். அந்த அனுதாபம் கொடைவள்ளலுக்காக; தொழு நோய் என்னும் பேரால் அவரைப் பிடித்திருந்த கொடு நோய்க்காக. பாகவதரின் மனம் அதைத் தாங்கவில்லை. தாங்கவில்லை என்பது மட்டுமல்ல; அதை விரும்பவும் இல்லை.
பக்கம்:எம். கே. டி. பாகவதர் கதை.pdf/170
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை