பக்கம்:எம். கே. டி. பாகவதர் கதை.pdf/171

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

168 ஆம்; சில விஷயங்களில் மக்கள் அனுதாபம் காட்டுவதை விட, காட்டாமலிருப்பதே நல்லது என்பது அவருடைய கருத்து. அந்தச் சில விஷயங்களில் ஒன்றாக அதையும் கொண்டு விட்டார் அவர். அதற்குமேல் அவரால் உற்சாகத்தோடு பாடமுடிய வில்லை; கச்சேரியைச் சீக்கிரமாகவே முடித்துக் கொண்டு விட்டார். திரைக்குப் பின்னால் வந்ததும், 'என்ன இப்படித் திடீரென்று முடிந்துவிட்டீர்?' என்றார் அவருடைய அந்தரங்கநண்பர்களில் ஒருவர். 'நீங்கள் தடுக்கி விழுவதாக வைத்துக் கொள்ளுங் கள்; அப்போது உங்களைப் பார்த்து யாராவது சிரித்தால் உங்களுக்கு எப்படி இருக்கும்?' என்று அவரைத் திருப்பிக் கேட்டார் பாகவதர். சிரித்தால் மட்டுமா தூக்கிவிட்டால் கூட அப்போது பிடிக்காது!’ என்றார் அவர். 'அப்படித்தான் இதுவும்' என்றார் பாகவதர். நண்பருக்குப் புரியவில்லை; எதுவும்?' என்றார் அவர் மீண்டும். 'கொடு நோய்க்கு உள்ளான கோட்டையூராரைப் பார்த்துச் சிலர் 'சூச்சூ என்றதும், இன்னும் சிலர் 'அடடா!' என்றதும்' என்றார் பாகவதர். 'அதற்கு... ?' 'கோட்டையூராரே கவலைப்படாதபோது நீங்கள் ஏன் கவலைப்படுகிறீர்கள் என்று கேட்கிறீர்களா? என்ன செய்வேன், அதை என்மனம் தாங்கவில்லையே?’ என்றார் பாகவதர், அதற்குள் தம் கண்களில் தளும்ப ஆரம்பித்து விட்ட கண்ணிரை அவருக்குத் தெரியாமல் மறைப்பதற் காகத் தம்முடைய அறைக்குள் நுழைந்து கொண்டே.