பக்கம்:எம். கே. டி. பாகவதர் கதை.pdf/175

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

172 அதையும் பிடிக்காதுதான்! ஆனால் வயதானவர்களுக்குமட்டுமல்ல, வயதாகாதவர்களுக்கும் இந்தக் காலத்தில் வேதாந்தம் ஒரு சுவையான பொழுது போக்காயிருக்கிறது. அந்த வகையில் அது எனக்கும் பிடிக்கிறது. ஆனால் பிறரை ஏமாற்றுவதற்காகச்சிலர் அதைப் பயன்படுத்துகிறார்கள். நான் அதை அவ்வாறு பயன்படுத்துவதில்லை' என்றார் அண்ணாதுரை. இதற்குப் பின் திரு அண்ணாதுரை வந்தால் அவர் கேட்காமலே வேதாந்தப்பாடல்கள் சிலவற்றைப் பாகவதர் பாடுவதும், அவற்றைக் கேட்டு அனுபவித்து விட்டு அவர் போவதும் வழக்கமாயிற்று. இப்படியாக இவர்கள் நட்பு முதிர முதிர, 'பாகவதருக்கென்றே ஒரு கதை எழுதி, அவரை வைத்துப் படம் எடுத்தால் என்ன?’ என்ற ஒர் எண்ணம் அண்ணா துரையின் உள்ளத்தில் உதயமாயிற்று. அதைச் செயல்படுத்த அவர் உடனே பாகவதருக்குரிய கதையை அவரிடம் படித்துக் காட்டி, 'இந்தப் படத்தில் நீங்கள் நடிக்க வேண்டும்' என்றார். "மன்னிக்க வேண்டும்' என்றார் பாகவதர். ‘'எதற்காக?' 'இந்தப்படத்தில் நான் நடிக்கமுடியாமல் இருப்பதற்காக. ' 'ஏன்?" “உங்கள் கதைக்கு ஏற்ற கதாநாயகன் நான் அல்ல." 'உங்களுக்கென்றே நான் இந்தக் கதையை எழுதியிருக்கும்போது நீங்கள் அவ்வாறு சொல்லக் காரணம்?' "தெரிந்தோ தெரியாமலோ, நடிக்கும் படங்களில் மட்டுமல்ல; வாழ்க்கையிலும் நான் தெய்வ பக்தி