பக்கம்:எம். கே. டி. பாகவதர் கதை.pdf/176

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

173 உள்ளவனாக இருக்கிறேன் என்பது உங்களுக்குத் தெரியும். உங்கள் கதாநாயகனுக்கோ அந்த பக்தி இல்லை. அவனை மையமாக வைத்து எழுதப்பட்டிருக்கும் கதையில் நான் எப்படி நடிப்பேன்? நடிப்புக்காகத் தெய்வ நிந்தனை செய்யக்கூட என்மனம் துணியவில்லையே!” 'உங்கள் கொள்கை அதுவானால், அதில் நீங்கள் உறுதியோடு இருப்பது உண்மையானால், அதற்கு நான் தலைவணங்குகிறேன்!” என்றார் அண்ணாதுரை, தமக்கே உரிய பெருந்தன்மையுடன். 'கொள்கை எதுவாயிருந்தாலும் பிறருடைய விருப்பத்துக்கு விரோதமாக அவற்றைத் திணிக்க விரும்பாத உங்கள் பெருங்குணம் என்னை வெகுவாகக் கவருகிறது’ என்று அவரை மனமுவந்து பாராட்டினார் பாகதவர். 'நீங்கள் மட்டும் அதற்குச் சளைத்தவரா, என்ன? பக்திப் பாடல்கள் என்னுடைய கொள்கைக்கு உடன்பாடு இல்லை என்பதற்காக நீங்கள் வேதாந்தப் பாடல்கள் பாடி என்னை மகிழ்விக்க வில்லையா?” என்றார் அண்ணாதுரை. 'அதற்காகப் பக்திக் கதை எழுதி, அதில் நீங்கள் என்னை நடிக்கச் சொல்லமாட்டீர்கள் என்று நான் நினைக்கிறேன்!"என்றார் பாகவதர் சிரித்துக் கொண்டே. 'அது நடக்காத காரியம்; நானும் கொள்கைப் பிடிப்பில் உங்களுக்குப் பின் வாங்கியவனல்ல" என்று அண்ணாதுரை சிரித்துக்கொண்டே எழுந்து நடந்தார். அது என்ன கதை?’ என்று தெரிந்துகொள்ள நீங்கள் விரும்புகிறீர்களல்லவா? அதுவே 'சொர்க்க வாசல்", பாகவதருக்குப் பதிலாக அதில் நடித்தவர் யார்? அவரே திரு கே. ஆர்.ராமசாமி. பொது வாழ்வில் இவ்வளவு கொள்கைப் பிடிப்போடு இருந்த பாகவதர், தம் சொந்த வாழ்விலே