பக்கம்:எம். கே. டி. பாகவதர் கதை.pdf/178

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

175 போல் கும்பிட்டுக் கொண்டே முந்நூறு ரூபாயை எடுத்துக் கணபதியின் விக்கிரகத்துக்குக் கீழே வைத்துவிட்டு போவார். இதற்காக நீங்கள் இவ்வளவு தூரம் வருவா னேன்? யாரிடமாவது கொடுத்தனுப்பலாமே அல்லது மணியார்டராவது செய்யலாமே? என்றேன் நான் ஒரு நாள். அதற்கு அவர் சொன்ன பதிலை இன்று நினைத்தாலும் என் நெஞ்சு நெகிழ்ந்து விடுகிறது. யாரிடமாவது கொடுத்தனுப்பி னாலோ அல்லது மணியார்டர் செய்தாலோ அது தம் தங்கைக்குத் தெரிந்துவிடுமாம்; தெரிந்தால் அவள் உன்னை மதிக்கமாட்டாளாம். அதற்காக ஒவ்வொரு மாதமும் அவரே வந்து அவளுக்குத் தெரியாமல் அதைப் பூஜை அறையில் வைத்துவிட்டுப் போகிறாராம். இப்படி ஓர் உத்தமரை இனி நான் எந்த ஜன்மத்தில் காணப்போகிறேன்? அவரால் மட்டுமென்ன, நம்மாலுந்தான் காண முடியப் போகிறதா, என்ன? தியானமே எனது மனது நிறைந்தது... பாகவதரின் ஏழாவது படமாக வெளிவந்தது 'அசோக்குமார். இந்தப் படத்தில் அவருடன் கதாநாயகி யாக நடித்தவர் குமுதினி, இவரும் புதுமுகமே. நடிப்பதற்கு மட்டும்தான் பாகவதர் புதுப்புது முகங்களை அறிமுகப் படுத்திக் கொண்டிருந்தார் என்ப தில்லை; பின்னணி பாடுவதற்கும் அவர் புதுப்புது முகங்களை அறிமுகப்படுத்திக் கொண்டிருந்தார். அவர் களில் குறிப்பிடத் தக்கவர்கள் இருவர். ஒருவர் திருமதி எம்.எல். வசந்தகுமாரி, இன்னொருவர் சூலமங்கலம் ராஜலட்சுமி. புகழ்பெற்ற டைரக்டர் திரு ராஜா சந்திரசேகரால் டைரக்ட் செய்யப்பட்ட இந்தப் படத்தில் திரு எம்.ஜி.ஆர் மகேந்திரன் என்னும் ஒரு சிறு பாத்திரத்தை ஏற்று நடித்தார். அதைக் காரணமாக வைத்துக்கொண்டு இப்போது அசோக் குமாரை எங்கேயாவது திரையிடுபவர்கள், எம்.ஜி.ஆர்