பக்கம்:எம். கே. டி. பாகவதர் கதை.pdf/179

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

176 நடித்த அசோக்குமார் என்று விளம்பரம் செய்கிறார்கள். இது பாகவதருடைய சகோதரர்களின் மனத்தையும், ரசிகர்களின் மனத்தையும் எவ்வளவு தூரம் புண்படுத்துகிறது என்பதை நான் அறிவேன். அவருடைய சகோதரதர்களில் ஒருவரான திரு. சண்முகம் ஒரு சமயம் இதுகுறித்துச் சொன்னார்: ‘'எத்தனையோ வகைகளில் சிறந்து விளங்கும் எம்.ஜி.ஆர். இதை எப்படி அனுமதிக்கிறார் என்று எனக்குத் தெரியவில்லை!" நான் சொன்னேன்: "அவருக்கு இது தெரிந்திருக்காது; தெரிந்திருந்தால் நிச்சயம் அனுமதித்திருக்கமாட்டார்.' ஆம், பிறருடைய புகழில் பங்குபெறும் விரும்பத் தகாத எண்ணம் வேறு யாருக்காவது இருக்கலாம்; 'பொன் மனச்செம்மலான எம்.ஜி.ஆருக்கு இருக்க முடியா தல்லவா? 'அசோக்குமாரில் பாகவதரால் பாடப்பட்டுப் பிரபலமான பாடல்களில் ஒன்று 'பூமியில் மானிட ஜென்மம் எடுத்தும் ஒர்...' என்ற பாடலாகும். இது பெரியவர்களை மட்டுமல்ல; குழந்தைகளையும் எவ்வளவு தூரம் கவர்ந்தது என்பதற்கு இதோ ஒரு கடிதம்: புதுக்கோட்டை 4.1.69. இரண்டாவது உலகப்போரின் இறுதிக்கட்டம்; சிங்கப்பூர் மீது ஜப்பானிய விமானங்கள் குண்டுமாரி பொழிந்து கொண்டிருந்தன. எதிரியின் விமானங்கள் வந்தால்போதும்; மூலைக்கு மூலை பொருத்தப்பட்டிருந்த அபாய அறிவிப்புச் சங்குகள் 'ஒ'வென்று அலறும். உடனே எல்லோரும் வீட்டைவிட்டு வெளியே ஓடிவந்து, வீதிகளிலே தோண்டிவைக்கப்பட்டிருக்கும் பாதுகாப்புக் குழிகளில் பதுங்கிக் கொள்வார்கள். அப்படிப் பாதுகாப்புக் குழிகளுக்கு ஒடும் போதெல்லாம் ஒரு குடும்பத்தினர்