பக்கம்:எம். கே. டி. பாகவதர் கதை.pdf/19

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

16


'அதெல்லாம் ஒன்றுமில்லை, அம்மா கடவுள் எனக்கு ஞானக்கண் கொடுத்திருக்கிறார் என்றான் பையன், அப்போதும் சிரித்துக்கொண்டே.

"ஞானக் கண்ணாவது...?'

"ஆமாம், அம்மா இனிமே போக்கிரிப் பயல்க ளுடன் சேரக்கூடாது' என்பதைத் தெரிந்து கொள்ள எனக்கு இந்த ஞானக்கண் வேண்டியிருந்தது; அதற்காகக் கொடுத் திருக்கிறார். '

'நல்ல வேடிக்கைதான், போ அவர்களில் யாராவது உன்னை அடித்துவிட்டார்களா, என்ன?”

'ஊஹ-ம்; அவர்கள் ஒரு குரங்கிடம் செய்த சேட்டை என்னை இந்தக் கதிக்கு உள்ளாக்கி விட்டது அம்மா!'

"ஐயோ, மகனே உன் அழகான நெற்றியில் இப்படி ஒர் ஆழமான வடுவை ஏற்படுத்திக்கொண்டு விட்டாயேடா: இது அவ்வளவு சுலபமாக மறையவா போகிறது? இப்படி வா!' என்று தன் அருமை மகனை அணைத்தபடி அழைத்துக்கொண்டுபோய், அவன் காயத்தைக் கழுவி, அதற்கு வெற்றிலையும் சுண்ணாம்பும் இடித்து வைத்துக் கட்டினாள் அவள்.

பின்னால் அந்த ஆழமான வடுகூட அவன் அழகுக்கு அழகு செய்யும் என்பதை அவள் அப்போது கண்டாளா? அல்லது, அவனைப் பற்றிப் பேசுபவர்களெல்லாம் அந்த வடுவைப் பற்றியும் பேசுவார்கள் என்பதைத்தான் அவள் கண்டாளா?

இல்லை!

அந்த வடுவை வைத்து எத்தனை கதைகள் கட்டப் பட்டன. அந்நாட்களில்? அத்தனை கதைகளிலும் அவன் அப்பாவின் கோபமும்,அவர் தம் தொழிலில் கையாளும்