பக்கம்:எம். கே. டி. பாகவதர் கதை.pdf/202

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

199 வசனத்தை அமைத்துத் தந்தவர் திரு.புதுமைப்பித்தன். இதில் பாகவதருக்கு ஜோடியாக நடித்தவர் திருமதி பானுமதி. புகழ்பெற்ற திரு.ராஜா சந்திரசேகரால் டைரக்ட் செய்யப்பட்ட இப்படம் எதிர்பார்த்த அளவு வெற்றி பெறவில்லை . 'ராஜமுக்தி'க்குப் பிறகு பாகவதரின் பதினோராவது . படமாக வெளிவந்தது 'அமரகவி'. இதன் திரைக்கதை வசனத்தைக் கவிஞர் சுரதா அமைத்திருந்தார். இந்தப் படத்தில் பாகவதருக்கு ஜோடியாக நடித்திருந்தவர் டி.ஆர். ராஜகுமாரி. திரு எப். நாகூரால் டைரக்ட் செய்யப் பட்டிருந்த இப்படம் ஓரளவு வெற்றியடைந்ததென்றே சொல்லவேண்டும். ஆனாலும் அந்த வெற்றி பாகவதரைப் பழைய நிலைக்குக்கொண்டு வரும் அளவுக்கு உதவ வில்லை . காரணம், அதற்குள் காலமும் மக்களும் எத்தனையோ வகையில் மாறி விட்டிருந்ததுதான்! இதைப் புரிந்து கொண்டு அந்த நாளிலும் சரி.இந்த நாளிலும் சரி - 'பிழைக்கத்தெரிந்தவர்கள்' பிழைத்தார்கள்; 'பிழைக்கத் தெரியாதவர்கள்’ செத்தார்கள்; சாகிறார்கள். உதாரணத்துக்கு இந்தச் சம்பவத்தைத்தான் பாருங்களேன்! - இதை நான் கூறவில்லை; பாகவதரின் வீட்டு வாத்தியாரா யிருந்த திரு.அமிர்தவாசகம் கூறுகிறார்; “பெங்களூர் காந்தி நகரில் பாகவதர் குடும்பம் வாழ்ந்து வந்த காலம் அது. குழந்தைகள் நால்வருக்கு‘பாகவதருக்கு மூன்று குழந்தைகள்தானே? இவரென்ன, நான்கு என்று குறிப்பிடுகிறாரே?' என்று நீங்கள் ஐயுறலாம் - ஆம். குமாரிகள் சுசீலா, சரோஜா, குமாரர் ரவீந்திரன் ஆகியோர் தவிர, பாகவதர் அவர்களின் கடைசித் தங்கையான பங்கஜமும் அவர்களுடைய நாலாவது குழந்தையாக இருந்து வந்தது. இவர்களுக்குப் 'பிரைவேட்' டாக 'டியூஷன் சொல்லித் தரும் ஆசிரியனாக நான் இருந்து வந்தேன்.