________________
200 பெண் குழந்தைகளைப் பள்ளியில் சேர்க்க வேண்டு மென்பது 'அம்மா'வின் ஆசை - பாகவதர் அவர்களின் துணைவியாரை நாங்கள் 'அம்மா' என்றுதான் குறிப்பிடுவது வழக்கம் - அவர்களுடைய விருப்பப்படி. நான் பிள்ளைகளை அழைத்துச்சென்று ஒரு பெண்கள் பள்ளியில் இடம் கேட்டேன். குழந்தைகளை அறிமுகப்படுத்தும் போது, 'இன்னாருடைய குழந்தைகள்' என்று கூறவேண்டியதாயிற்று. இது தெரிந்ததும் அந்தப் பள்ளி ஆசிரியைகள் இதைத் தலைமையாசிரியைக்குச் சொல்ல, அவர் இவர்களுடைய அப்பாவைக் கூட்டி வந்தால்தான் இவர்களைப் பள்ளியில் சேர்க்க முடியும்' என்று சொல்லிவிட்டார். காரணம், பாகவதரை நேரில் பார்க்க வேண்டும் என்ற ஆவல்தான். பாகவதர் அவர்கள் பிள்ளைகளைப் பள்ளியில் சேர்க்கும் பொருட்டு ஒரு பள்ளிக்கு வருவதென்பது அவ்வளவு சாமான்யமா, என்ன? அதற்கு வேண்டிய நேரந்தான் அவர்களுக்கு ஏது? சென்னை , பூனா, பம்பாய், கோவை என்று அவர்கள் எப்பொழுது பார்த்தாலும் எங்கேயாவது சென்றுகொண்டே இருப்பார்கள். என்றைக் காவது ஒரு நாள் பெங்களூர்க்கு வருவார்கள்; வந்தாலும் ஏதாவது ஓர் ஓட்டலில் தான் தங்குவார்கள். அவ்வப்போது வீட்டுக்கு வந்து பிள்ளைகளைப் பார்த்துவிட்டுப் போய் விடுவார்கள். அவர்களுடைய குடும்பத்தில் உள்ள யாரும் தைரியமாக அவர்களிடம் சென்று பேசமாட்டார்கள். நான் மட்டும் அதற்கு விதிவிலக்கு. நாட்கள் கடந்தன; பெண்கள் இன்னும் பள்ளியில் சேர்ந்தபாடில்லை. ஒரு நாள் பாகவதர் அவர்கள் பெங்க ளூருக்கு வந்திருக்கிறார்கள் என்ற செய்தி எனக்கு எட்டியது. உடனே அம்மா அவர்கள் பொறுப்பை என் தலையில் கட்டிவிட்டார்கள். காலை ஏழு மணியளவில் நான் அவர்கள்