பக்கம்:எம். கே. டி. பாகவதர் கதை.pdf/205

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

202 - பள்ளியினின்றும் விடைபெற்று மீண்டோம். வரும் வழியில், 'அந்தப் பள்ளியில் எத்தனை குழந்தைகள் படிக்கும்?' என்று பாகவதர் அவர்கள் கேட்டார்கள். 'ஏறக் குறைய ஆயிரம் பேர் இருக்கலாம்' என்றேன். 'இவ்வளவு தானே, இன்று மாலையே அவர்களுக்கெல்லாம் தேநீர் விருந்து கொடுக்க ஏற்பாடு செய்து விடுங்கள்' என்றார்கள். அப்படியே அந்த விருந்து அன்று மாலையே நடைபெற்றது. தம்மைப் பார்த்து மகிழ்ந்த குழந்தைகளைத் தாமும் மகிழ்விக்கவேண்டும் என்பதற்காகவே பாகவதர் அவர்கள் அன்று என்னைத் தேனீர் விருந்துக்கு ஏற்பாடு செய்யச் சொன்னார் போலும். என்னே அவர்களுடைய குழந்தை உள்ள ம்!" எப்படியிருக்கிறது கதை? -பிழைக்கத் தெரிந்த பாகவதரா இவர்? - அது தெரிந்தவராயிருந்தால் இவர் ஏன் பள்ளிக்கூடத்துக் குழந்தைகளைக் கூப்பிட்டு விருந்து வைக்கப்போகிறார்? பத்திரிகைக்காரர்களையல்லவா கூப்பிட்டு விருந்து வைத்திருப்பார்? அதுதான் போகட்டுமென்றால், இவருடைய நிலைமை அறிந்து, இவருக்கு யாராவது உதவ முன்வந்தால் அவர்களிடம் இவர் என்ன சொல்வது? -'எனக்கு வாங்கிப் பழக்கமில்லை; கொடுத்துத்தான் பழக்கம்' என்றா சொல்வது? கொடுப்பதை வாங்கிக்கொண்டு, 'அப்படி என்ன பிரமாதமாகக் கொடுத்துக் கிழித்து விட்டான்? அவன் கொடுக்காவிட்டால் நான் பழைய நிலைக்கு வந்திருக்க மாட்டேனா?' என்றல்லவா சொல்லியிருக்க வேண்டும்? இப்படியெல்லாம் பிழைக்கத் தெரியாமல் பிழைத்த பாகவதர், 'அமரகவி'க்குப் பிறகும் கால வேறுபாட்டை உணராமல் எப்பொழுதும் போல் தம்மையும் தம்முடைய திறமையையும் மட்டுமே நம்பி நாடகம், கச்சேரி, சினிமா ஆக மூன்று துறைகளிலும் முழுமூச்சுடன் ஈடுபட்டார். அதன் பயனாக அவருடைய பன்னிரண்டாவது படமாக