பக்கம்:எம். கே. டி. பாகவதர் கதை.pdf/209

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

206 ரவீந்திரனின் கருணை! இதைக்கூட இவ்வளவு ரகசியமாக வைத்திருக்கிறாரே! நெருங்கிய நண்பனான என்னிடம்கூடச் சொல்லவில்லையே?' என்று எண்ணி எண்ணி என் இதயம் பெருமிதத்தால் விம்மிற்று. மேலும், பாகவதர் மகனிடம் ஏழை-பணக்காரன் என்ற வித்தியாசம் கிடையாது. ஏழையாகிய என்னை அவருடைய பங்களாவிற்கு (திருச்சி கண்டோன்மெண்ட் பகுதியில் உள்ளது) அடிக்கடி அழைத்துச்சென்று, உணவு அருந்தச் செய்திருக்கிறார். அதேபோல் நான் ஒரு போலீஸ்காரன் மகன் என்று கூட நினைக்காமல், அடிக்கடி நாங்கள் குடியிருந்த 'போலீஸ்'லைனுக்கு சைக்கிளில் வந்து தினமும் என்னைப்பார்த்துப் பேசிவிட்டுப் போனால்தான் அவருக்கு நிம்மதி. பள்ளி இறுதித்தேர்வு எழுதும் சமயம் நான் மிகவும் கஷ்டப்பட்டேன். அப்போது கைம்மாறு கருதாது பலமுறை பணஉதவிசெய்திருக்கிறார். இன்னும் நான் அதை நினைத்து நினைத்து அவரை மனமார வாழ்த்திக்கொண்டே இருக்கிறேன். | - சென்னையில் எனக்கு அரசாங்க வேலை கிடைத்த பிறகு அவருடைய தொடர்பு விட்டுப்போய் விட்டது, அவரும் காரைக்குடி அழகப்பா பொறியியல் கல்லூரியில் படித்து முடித்துவிட்டுத் தற்சமயம் எங்கிருக்கிறார் என்று தெரியவில்லை . | எங்கிருந்தால் என்ன? அவருடைய உதவியை என்றும் நான் நன்றியுடன் நினைத்துக்கொண்டே இருப்பேன். திருவல்லிக்கேணி கே. வேணுகோபால்.