22
எதையும் இருப்பவன் செய்தால்தானே ‘தொண்டு: என்று இந்த உலகம் ஏற்றுக்கொள்கிறது? இல்லாதவன் செய்தால் அதை எங்கே தொண்டு என்று ஏற்றுக் கொள்கிறது?
எனவே, அந்த வகையிலும் அவர் அவற்றைத் தொடர்ந்து செய்ய விரும்பவில்லை; தம் மகனையும் தொடர்ந்து செய்ய விடுவதற்கு இசையவில்லை.
அதன் பலன்?
ஒரு நாள் குழந்தை தியாகராஜன் வீட்டில் சொல்லிக் கொள்ளாமல் ஓடிவிட்டர்ன்.
எங்கே?
அது தான் தெரியவில்லை யாருக்கும் -'ஒடு, ஒடு' என்று ஓடினார்கள்; தேடு, தேடு என்று தேடினார்கள். தெருவெல்லாம், தெரிந்தவர் வீடெல்லாம், ஊரெல்ல்ாம், உறவினர் இல்லமெல்லாம் சென்று சல்லடை கொண்டு சலித்துக்கூடப் பார்த்துவிட்டார்கள். ஊஹாம், தியாக ராஜனைக் காணவே காணோம்.
எப்படியிருக்கும் தாயார் மாணிக்கத்தம்மாளுக்கு?
பெற்ற வயிறு பற்றி எரிய அவள் அழுதாள்; 'கடவுளே, நான் கண்ணை இழந்தவளாகிவிட்டேன்; எனக்குக் கண்ணைக் கொடு' என்று தொழுதாள். 'எல்லாம் உங்களால் வந்த வினை' என்று தன் கணவரை இடித்துரைத் தாள்; 'போங்கள், போய் என் மகன் எங்கே இருந்தாலும், அவனை எப்படியாவது கண்டு பிடித்து அழைத்து வாருங்கள்' என்று கடிந்துரைத்தாள்.
தகப்பனார் கிருஷ்ணமூர்த்தி என்ன செய்வார்,பாவம். ஏதோ ஒரு வார்த்தை சொன்னதற்காகப் பையன் இப்படி ஓடிவிடுவான் என்று அவர் கண்டாரா? அதைத் தான் நாம் ஏன் சொன்னோம் என்று தம்மைத் த்ாமே நொந்து கொண்டு வீட்டை விட்டுப் புறப்பட்டார். வழியில் எதிர்ப்பட்டவர்களிடமெல்லாம் தம் மகனைப்