பக்கம்:எம். கே. டி. பாகவதர் கதை.pdf/26

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

23 பற்றி விசாரித்துக் கொண்டே நடந்தார். கடைசியாகச் சந்தித்த நண்பர் ஒருவர் 'உம்முடைய மகனை நான் கடப்பையில் பார்த்தேன்' என்று சொன்னதுதான் தாமதம்; "நிஜமாகவா?' என்று துள்ளிக்குதித்தார் கிருஷ்ணமூர்த்தி. "நிஜமாகத்தான்' என்றார் அவர். 'அங்கே எங்களுக்குச் சொந்தக்காரர்கள்கூட யாரு மில்லையே, எங்கே தங்கியிருப்பான் அவன்?' என்று யோசித்துக் கொண்டே வானத்தைப் பார்த்தார்கிருஷ்ண மூர்த்தி. 'ஒரு வீடா, இரண்டு வீடா? அங்கே உள்ள எல்லா வீடுகளுமே இப்போது அவனுடைய வீடுகளாய்த்தான் இருக்கின்றன’’ 'அது எப்படி இருக்க முடியும்?" 'அன்று கண்ணனின் கானம் கேட்டு ஆயர்பாடியே மயங்கி நின்றது அல்லவா? அதே மாதிரி இன்று உம்முடைய மைந்தனின்கானம் கேட்டுக் கடப்பையே மயங்கி நிற்கிறது!” 'அப்படியா?' என்று வாயைப் பிளந்த கிருஷ்ண மூர்த்தி, இனி அவன் போக்கில் அவனை விட்டுவிடுவது தான் சரி என்று அப்போதே தீர்மானித்துக் கொண்டார்; அந்தத்தீர்மானத்துடன் அவர் தம்நண்பரிடம் விடைபெற்றுக் கொண்டு நேரே கடப்பைக்குச் சென்றார். அங்கே அவரைப் பார்த்தவர்களெல்லாம் 'நீங்களா தியாகராஜனின் தகப்பனார், நீங்களா தியாகராஜனின் தகப்பனார்?' என்று வியப்போடு கேட்டார்கள். அவருக்கு ஒன்றும் புரியவில்லை, குழம்பினார். அந்தக் குழப்பத்தில், 'ஒருவேளை நாம் இவனுக்குத் தகப்பனார் இல்லையோ?" என்று அவருக்கே சந்தேகம் வந்துவிட்டது. எதற்கும் இன்னொரு முறை சொல்லித்தான் பார்ப்போமே?' என்று எண்ணியவராய், 'ஏன் நான்தான் இவனுடைய தகப்பனார்' என்றார் கொஞ்சம் தயக்கத் துடனேயே.