பக்கம்:எம். கே. டி. பாகவதர் கதை.pdf/27

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

24

'இவன் உங்கள் வீட்டில் பிறந்திருக்க வேண்டிய பிள்ளை இல்லை ஐயா, இவன் தேவாவதாரம்; இவ னுடைய கானம் தேவாமிருதமான கானம்' என்றார்கள் அவர்கள் பரவசத்துடன். இதைக் கேட்ட கிருஷ்ணமூர்த்திக்குப் பெருமை தாங்கவில்லை; தம் மகனை இறுக அனைத்துக்கொண்டு, 'நான்தான் இவனுடைய தந்தை; நான்தான் இவனுடைய தந்தை' என்றார் ஒரு முறைக்கு இரு முறையாக.

அதற்குப் பின் அவருக்கு என்ன தோன்றிற்றோ என்னவோ, “ஏண்டா, நான்தானே உன் தந்தை7' என்று தம் மகனையே அசடு வழியக்கேட்டார்.

மகன் சிரித்தான்!

"ஏன் சிரிக்கிறாய்?" என்றார் அப்பா.

"இந்த உலகத்தில் நீங்கள்தான் எனக்குத் தந்தை; அதில் உங்களுக்குச் சந்தேகமே வேண்டாம். ஆனால்...'

"ஆனால் என்னடா ?'

"அந்த உலகத்தில் எனக்கு வேறோரு தந்தை இருக்கிறார் அப்பா'

"யார் அவர்? "

"எங்கிருந்தோ வந்த என்னிடம் இங்குள்ள இத்தனை பேரும் அன்பும் ஆதரவும் காட்டும் அளவுக்கு என்னை அருகதை யுள்ளவனாகப் படைத்திருக்கும் ஆண்டவன்தான் அந்தத்தந்தை' என்றான் பையன் தன்னைச்சுற்றி நின்ற வர்களை நன்றியுணர்ச்சியுடன் நோக்கிக்கொண்டே.

இப்போதுதகப்பனார்சிரித்தார்; சிரித்துவிட்டு, "உனக்கு மட்டும் இல்லையடா, கண்ணா இந்த உலகத்திலுள்ளஅத்தனை பேருக்கும் அவர்தான் தந்தை, வா, போகலாம்' என்றார்.

"இவ்வளவு பேரையும் விட்டு விட்டா என்னை அங்கே வரச் சொல்கிறீர்கள் என்றான் பையன் கண்களில் நீர் மல்க.