பக்கம்:எம். கே. டி. பாகவதர் கதை.pdf/28

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

25 'இனி அவர்களை நீ விட்டாலும் அவர்கள் உன்னை விடமாட்டார்கள்; எங்கிருந்தாலும் தேடி வந்து விடுவார்கள். வாடா, போகலாம்!” என்றார் தந்தை மீண்டும். பையன் அப்போதும் தயங்கினான். தன்னைச் சுற்றியிருந்தவர்களைப் பிரிய மனமின்றி. 'அம்மா உனக்காக அங்கே உண்ணாவிரதம் இருந்து கொண்டிருக்கிறாள்; உன்னைப்பார்த்த பிறகு தான் அவள் தன் விரதத்தை முடிக்கப் போகிறாளாம்!” என்றார் தந்தை. அதற்கு மேல் தனயன் தயங்கவில்லை; தாமதிக்க வில்லை. 'இதோ வந்துவிட்டேன் அம்மா, இதோவந்து விட்டேன்' என்று தன்னை மறந்து சொன்ன அவன், 'உங்கள் அனைவருக்கும் என் நன்றி, உங்களுடைய அன்பும் ஆதரவும் என்றும் என் நினவிைல் இருக்கும்' என்று தன்னைத் தக்க சமயத்தில் தடுத்தாட் கொண்டவர்களிட மெல்லாம் சொல்லிவிட்டுத் தன் தந்தையுடன் புறப்பட்டான். வழியில்... கண் இழந்த தமக்குக் கண் கொடுத்தது போல் காணாமற் போன தம் மகனைக் கண்டெடுத்துத் கொடுத்த ஏழுமலையானைத் தரிசிக்கவேண்டும் போலிருந்தது கிருஷ்ணமூர்த்திக்கு; திருப்பதிக்குச் சென்றார் தியாகராஜ னுடன். அவர்கள் போவதற்குள் அங்கே தரும தரிசனம் நடந்து முடிந்துவிட்டது. அதற்கு மேல் வேங்கடமுடை யாணை வெறுங்கையுடன் சேவிக்க முடியுமா? அதற்குப் பணம்? அந்தப்பணத்துக்கும் அவர்களுக்கும் தான் ரொம்ப ரொம்ப தூரமாச்சே யாராவது பணமுள்ளவர்கள் வரமாட்டார்களா? அவர்களுக்காகவாவது எம்பெருமானை மறைத்திருக்கும் அந்தத்திரை கொஞ்சம் விலகாதா? அவரை நாம் ஆசை தீரத் தரிசிக்க மாட்டோமா?' என்று அவர்கள் காத்திருந்தனர், காத்திருந்தனர். நீண்ட நேரத்துக்குப் பிறகு அவர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்த அந்தப் புண்ணியவான்களில்