பக்கம்:எம். கே. டி. பாகவதர் கதை.pdf/35

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32 அவளோ, "உனக்கு ஏண்டா, அந்தக் கூத்தாடிப் பிழைப்பு?' என்றாள் சோர்வுடன். 'போம்மா நடேசய்யர் அதைப் பிழைப்புக்காகவா நடத்துகிறார்? கலைக்காக நடத்துகிறார் அம்மா, கலைக்காக நடத்துகிறார்' என்றான் அவன், அப்போதே எல்லாம் தெரிந்தவனைப்போல. 'என்ன கலையோ? காசு என்று வரும்போது எல்லாக் கலையும் கொன்லயாகத்தான் போய்விடுகிறது" 'அதையெல்லாம் பார்க்க வேண்டியவர்களே பார்க்காத போது நாம் மட்டும் ஏம்மா, பார்க்கவேண்டும்?" 'என்னவோ, உன் இஷ்டம் போல் செய்; அதற்காக நீ இன்னொரு முறை கடப்பைக்கு ஒடி வைக்காமல் இருந்தால் சரி' என்றாள் தாயார். பையன் சிரித்தான் தியாகராஜன் கலந்துகொண்ட முதல் நாடகம் அது. உங்களுக்குத்தான் தெரியுமே. அமெச்சூர் நாடகங்களுக்கு யார் சிரித்துக் கொண்டே வருகிறார்கள் மூக்கால் அழுது கொண்டே தானே வருகிறார்கள், 'எப்படியோ ஒரு டிக்கெட்டை என் தலையில் கட்டிவிட்டான். பாவி போய் பார்த்துத்தான் தொலைப்போமே என்று பஸ்ஸுக்கும் டி.பனுக்கும் வேறு செலவழித்துக்கொண்டு வந்து சேர்ந்தேன்' என்று அலுத்துக்கொண்டே அல்லவா வருகிறார்கள்? அப்படிப்பட்டவர்களையும் தன்னால் உணர்ச்சி வசப்படுத்த முடியும் என்பதை அன்றே தியாக ராஜன் நிரூபித்துக் காட்டிவிட்டான் காலகண்டருக்காகச் சந்திரமதி காட்டுக்கு வந்து தர்ப்பைப்புல் அறுக்கும் காட்சி அப்போது நடந்து கொண்டிருந்தது. 'அம்மா, பசிக்குதே தாயே, பசிக்குதே' என்று லோகிதாசன் வேடம் ஏற்றிருந்த தியாகராஜன் பாடிக் கொண்டே அம்மாவின் முந்தானையைப் பிடித்துக் கொண்டு