பக்கம்:எம். கே. டி. பாகவதர் கதை.pdf/42

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

39


'அவர் நொண்ட இவன் தொண்ட, அந்த வீடே 'தண், தண் என்று அதிர ஆரம்பித்துவிட்டது.

அடுக்களையிலிருந்த மாணிக்கத்தம்மாள் இந்தச் சத்தத்தைக் கேட்டதும், 'அங்கே என்னடா சத்தம்?' என்று குரல் கொடுத்தாள்.

'ஒன்றுமில்லையம்மா,நொண்டிச்சிந்து கற்றுக் கொடுக் கிறேன்!" என்றான் பையன்.

“யாருக்கு?' என்றாள் தாயார்.

"என்னுடைய சீடனுக்கு'

'சீடனுக்கா! நீயே இன்னும் சீடனாயிருக்கிறாய்; உனக்கு வேறே சீடன் வந்து சேர்ந்துவிட்டானா? என்று கேட்டுக்கொண்டே அவள் அடுக்களையை விட்டு வெளியே வந்தாள். இருவரும் வியர்க்க விறுவிறுக்க நொண்டியடித்துக் கொண்டிருந்ததைக் கண்டதும் அவளுக்கு 'அழுவதா, சிரிப்பதா?’ என்று தெரியவில்லை. 'ஏண்டா, இப்படிக் கூடச் செய்யலாமா?' என்றாள்.

நான் என்னம்மா செய்தேன்; ' என்றான் தியாகராஜன்.

'இவர் உன்னைவிட மூத்தவராயிருப்பார் போல் இருக்கிறதே! இவரை நீ இப்படி எள்ளி நகையாடலாமா?"

நான் என்னம்மா செய்வேன்? இவர் என்னை விட்டால் தானே?"

'அதற்காக இப்படியா செய்வார்கள்? ஆனானப் பட்ட ரீராமச்சந்திர மூர்த்தி ஏன் அவ்வளவு கஷ்டப் பட்டார், தெரியுமா?"

தெரியாதே, அம்மா!'

'அவருடைய சித்தி கைகேயிக்குக் கூனி, கூனி' என்று ஒரு தோழிஇருந்தாள். சிறு வயதில் அந்தத்தோழியின் கூனைப்பார்க்கும் போதெல்லாம் ராமனுக்கு வேடிக்கையா